Others

ஷாங்காய் டென்னிஸ் : பெடரர் தோல்வி

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி சீனாவில் நடந்து வரு­கி­றது. இதன் ஆண்கள் ஒற்­றையர் பிரிவு 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தர வரி­சையில் 3-வது இடத்தில் இருக்கும் ரோஜர் பெடரர் (சுவிட்­சர்­லாந்து), தர வரி­சையில் 70-வது இடத்தில் உள்ள ஸ்பெயின் வீரர் ஆல்பர்ட் ராமோஸ்சை சந்­தித்தார். 

இதில் பெடரர் 6-7 : 4-7, 6-2 : 3-6 என்ற செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளி­யே­றினார்.

 

குத்­துச்­சண்­டையில் வெற்றி விஜேந்தர் சிங் மகிழ்ச்சி

தொழில்­முறை குத்­துச்­சண்டை போட்­டியில் தான் கலந்­து­கொண்ட முதல் ஆட்­டத்தில் வெற்றி பெற்­றது குறித்து விஜேந்தர் சிங் மகிழ்ச்சி தெரி­வித்­துள்ளார்.

இந்­தி­யாவின் முன்­னணி குத்துச் சண்டை வீர­ரான விஜேந்தர் சிங், தொழில்­முறை குத்­துச்­சண்டை போட்­டியில் நேற்று முன்­தினம் முதல் முறை யாக களம் இறங் கினார்.

‘மூன்றாம் உலகப் போர்’ என்ற பெயரில் நடந்த இப்போட் டியில் பிரிட்­டனின் சோனி ஒயிட் டிங்கை சந்­தித்த அவர் நொக் அவுட் முறையில் வெற்றி பெற்றார்.

ஓய்வு முடிவை பெடரர் அறிவிப்பாரா?

டென்னிஸ் உலகின் ஜாம்­பவான் ரோஜர் பெடரர். 17 கிராண்ட்­சிலாம் பட்டம் வென்று சரித்­திரம் படைத்து இருக்­கிறார்.

34 வய­தான பெடரர் கிராண்ட்­சிலாம் பட்டம் வென்று 3 ஆண்­டு­க­ளுக்கு மேல் ஆகி­றது. கடை­சி­யாக 2012–ம் ஆண்டு விம்­பிள்டன் பட்­டத்தை கைப்­பற்­றினார்.

அதன்­பி­றகு 3 தடவை இறு­திப்­போட்­டிக்கு நுழைந்தும் பட்டம் வெல்ல இய­ல­வில்லை. கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் விம்­பிள்­ட­னிலும், சமீ­பத்தில் அமெ­ரிக்க ஓப­னிலும் ஜோகோ­விச்­சிடம் வீழ்ந்தார்.

வட்டு எறிதலில் ஒலிம்பிக் சம்பியனுக்கு அதிர்ச்சியளித்த கியூபாவின் வீராங்கனை

15-ஆவது உலக தட­கள சாம்­பி­யன்ஷிப் போட்டி சீனாவின் பீஜிங் நகரில் நடந்து வரு­கி­றது. போட்­டியின் 4-ஆவது நாளான நேற்று பெண்­க­ளுக்­கான வட்டு எறி­தலில் ஆச்­ச­ரி­யத்­திற்­கு­ரிய முடிவு கிடைத்­தது.

உலகக் கிண்ண வலைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி : மீண்டும் தோல்வியைத் தழுவிய இலங்கை அணி

உலகக் கிண்ண வலைப்­பந்­தாட்டப் போட்­டி­களில் சிட்னி ஒலிம்பிக் பாரக் அல்ஃபோன்ஸ் எரினா அரங்கில் நேற்று நடை­பெற்ற  குழு எச் இற்­கான மற்­றொரு தகு­திகாண் போட்­டி­யிலும் இலங்கை தோல்வியடைந்­தது.

நேற்­றைய போட்­டியில் இலங்­கையை எதிர்த்­தா­டிய ஸ்கொட்­லாந்து 59 –  27 என்ற கோல்கள் அடிப் ­ப­டையில் வெற்­றி­யீட்­டி­யது.

உலகக் கிண்ண வலைப்­பந்­தாட்டப் போட்­டி­களில் நான்­கா­வது தட­வை­யாக ஒவ்­வொரு கால்­ப­கு­தி­யிலும் இரட்டை இலக்க எண்­ணிக்­கையைப் பெறத்­த­வ­றி­யது.

உலக வெல்டர்வெயிட் குத்துச்சண்டை : மேவெதருடன் மோதுகிறார் பெர்ட்டோ!

வெல்­டர்­வெயிட் குத்­துச்­சண்­டையில் உலக சம்­பி­ய­னான அமெ­ரிக்­காவின் புளோயிட் மேவெதர், இவர் கடை­சி­யாக எதிர்வரும் செப்டெம்பர் 12ஆம் திகதி லோஸ் வெகாசில் நடை­பெறும் குத்­துச்­சண்டை போட்­டியில் கலந்­து­கொண்­டு­விட்டு, குத்­துச்­சண்டைப் போட்­டி­க­ளி­லி­ருந்து விடை­பெ­ற­வுள்­ள­தாகத் தெரி­விக்­க­ப­டு­கி­றது. 

அவ­ருடன் மோதும் வீரர் விவ­ரத்தை போட்டி அமைப்­பா­ளர்கள் தற்­போது அறி­வித்­துள்­ளனர்.

மோட்டார் சைக்கிள் ஓட்டப்போட்டி : இரு வீரர்கள் மரணம்

அமெ­ரிக்­காவில் உள்ள கலி­போர்­னியா மாகா­ணத்தில் இடம்­பெற்­று­வரும் உலக சூப்­பர்பைக் சாம்­பி­யன்ஷிப் போட்­டியின் போது இரு வீரர்கள் விபத்­துக்­குள்­ளாகி மர­ண­ம­டைந்­துள்­ளனர்.  

இந்த மோட்டார் சைக்கில் பந்­த­யத்தில்  பல்­வேறு நாட்டு வீரர்கள் கலந்து கொண்­டுள்­ளனர்.

இதில், முதல் சுற்று பந்­த­யத்­தின்­போது ஸ்பெயின் நாட்டின் 35 வய­தான மார்ட்னெஸ் மற்றும் 27 வய­தான ரிவாஸ் ஆகியோர் கலந்­து­கொண்னர்.

போட்டி ஆரம்­பிக்­கப்­பட்டு சில வினா­டி­களில் அவர்­களின் மோட்டார் சைக்கில், பாதையை விட்டு விலகி விபத்­துக்­குள்­ளா­னது.

பளு தூக்கும் போட்­டி : எடையை தாங்க முடியாமல் சரிந்து விழுந்த வீராங்கனை

கன­டாவில் நடந்த பளு தூக்கும் போட்­டியின் போது ஏற்­பட்ட திடீர் நிலை­கு­லைவால், வெனி­சு­லாவைச் சேர்ந்த பளு தூக்கும் வீராங்­க­னை­யான ஜெனிசிஸ் ரோட்­ரிகஸ் கோமஸ் சரிந்து விழுந்­தது பலரை அதிர்ச்­சிக்­குள்­ளாக்­கி­யது. 

ஒன்­டா­ரியோ மாகாண தலை­நகர் டொராண்­டோவில் அண்­மை யில் நடந்த  ‘பான் ஏம்’ விளை­யாட்டுப் போட்­டியில் கோமஸ் கலந்து கொண்டார்.

233 பவுண்ட் (106 கிலோ) எடைப்­பி­ரிவு பளு தூக்கும் போட்­டியில் அவர் பங்­கேற்ற போதுதான் இந்த அசம்­பா­விதம் நடந்­தது.

மேவெதரின் வெல்டர் வெயிட் பட்டம் பறிப்பு!

அமெ­ரிக்­காவின் பிர­பல குத்­துச்­சண்டை வீரர் மேவெ­தரின் வெல்டர் வெயிட் பட்டம் பறி­முதல் செய்­யப்­பட்­டுள்­ளது. 

கடந்த மே மாதம் பிலிப்பைன்ஸ் குத்­துச்­சண்டை வீரர் மேனி பேக்­கி­யோ­வுடன் அமெ­ரிக்க வீரர் பிளாயிட் மேவெதர் லோஸ்­வேகாஸ் நகரில் மோதினார். இந்த போட்­டியில் பங்­கேற்பு கட்­டணம் 2 லட்சம் அமெ­ரிக்க டொலர்­களை செலுத்த
மேவெதர் தவ­றி­ய­தை­யடுத்து உலக குத்­துச்­சண்டை அமைப்பின் இந்த நட­வ­டிக்­கைக்கு ஆளாகியிருக்கின்றார் மேவெதர்.

இந்த தொகையை கட்­டு­வ­தற்­கான கடைசி திகதி கடந்த ஜுலை 3ஆம் திக­தி­யாகும்.

இவனோவிக் அதிர்ச்சி தோல்வி

கிராண்ட்ஸ்லாம் போட்­டி­களில் ஒன்­றான விம்­பிள் டன் டென்னிஸ் போட்டி லண்­டனில் நடை­பெற்று வரு­கி­றது.

முன்­னணி வீராங்­க­னை­களில் ஒரு­வ­ரான அனா இவ­னோவிக்(செர்­பியா) 2ஆவது சுற்றில் அதிர்ச்­சி­க­ர­மாக தோற்றார்.

7ஆவது வரி­சையில் இருக்கும் அவர் 3–6, 4–6 என்ற செட் கணக்கில் அமெ­ரிக்­காவைச் சேர்ந்த பெதா­னி­யிடம் தோற்றார்.

உலகின் முதல் நிலை வீராங்­க­னை­யான செரீனா வில்­லியம்ஸ் (அமெ­ரிக்கா) 2ஆவது சுற்றில் ஹங்கே­ரியைச் சேர்ந்த போபோசை எதிர் கொண்டார்.

இதில் செரீனா வில்­லியம்ஸ் 6–4, 6–1 என்ற நேர் செட் கணக்கில் வென்று 3ஆவது சுற்­றுக்கு முன்­னே­றினார்.

Pages

Subscribe to RSS - Others