40 வருட வரலாற்றில் 400 ஓட்டங்கள் : தோல்விகளிலிருந்து மீண்டது இங்கிலாந்து

உல­கக்­கிண்­ணத்தில் பெற்ற தோல்­விக்கு பின்னர் துவண்டு போயி­ருந்த இங்­கி­லாந்து அணி நேற்­றுமுன்தினம் இடம்­பெற்ற நியூ­சி­லாந்து அணி­யு­ட­னான போட்­டியில் 210 ஓட்­டங்­களால் அபார வெற்றி பெற்­றது.

நாணய சுழற்­சியில் வெற்றி பெற்ற நியூ­சி­லாந்து அணி களத்­த­டுப்பைத் தீர்­மா­னித்­தது.

அந்­த­வ­கையில் துடுப்­பெ­டுத்­தாட கள­மி­றங்­கிய இங்­கி­லாந்து அணியின் ஆரம்பத் துடுப்­பாட்ட வீரர்­க­ளான ரோய் மற்றும் ஹேல்ஸ் ஆகிய இரு­வரும் பெரி­தாக சோபிக்­க­வில்லை.

பணக்கார வீரர்கள் பட்டியலில் இடம் பிடித்தார் டோனி...

உலகளவில் 100 பணக்கார விளையாட்டு வீரர்களின் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது. 

2015வது ஆண்டுக்கான அதிக ஊதியம் பெறும் விளையாட்டு வீரர்கள் என்ற அடிப்படையில் இந்த பட்டியல் வெளியிடப் பட்டுள்ளது.

அமெரிக்க குத்துச் சண்டை வீரரான மேவெதர் இந்த பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். அவர் வருமானம், 300 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும். கடந்த 4 வருடங்களில் 3வது முறையாக மேவெதர் முதலிடத்தை பிடித்துள்ளார்.

160 மில்லியன் டொலர் வருமானம் பெறும் குத்துச்சண்டை வீரர் போக்குயிடோ இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். 7

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் : வாவ்­ரிங்கா வெற்றி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் ஆண்­க­ளுக்­கான ஒற்­றையர் இறுதிப் போட்­டியில் ஜோகோ­விச்சை எதிர்­கொண்டு வாவ்­ரிங்கா வெற்­றி­யாளர் கிண்­ண­த்தை வென்­றுள்ளார்.

உலகின் முதல்­தர வீர­ரான ஜோகோவிச், பிரெஞ்சு ஓபனில் முன்­னணி வீரர்­களை வெற்­றி­கொண்டு வந்தார். 

9 முறை வெற்­றி­யாளர் பட்டம் வென்ற ரபேல் நடாலை காலி­று­தியில் வீழ்த்­திய ஜோகோவிச், அரை­யி­றுதி ஆட்­டத்தில், இங்­கி­லாந்து வீரர் ஆண்டி முர்­ரேவை தோற்­க­டித்து 3 ஆவது முறை­யாக இறு­திப்­போட்­டிக்கு தகுதி பெற்றார்.

இதனால் பிரெஞ்சு ஓபன் பட்­டத்தை வெல்­வ­தற்கு ஜோகோ­விச்கு அதிக வாய்ப்பு இருப்­ப­தாக கரு­தப்­பட்­டது.

சர்வதேச டெஸ்ட் தர வரிசை : சங்கா, மத்தியூஸ், ஹேரத் ஆதிக்கம்

அவுஸ்­தி­ரே­லியா மற்றும் மேற்­கிந்­திய தீவுகள் அணிகளின் முத­லா­வது டெஸ்ட் போட்­டியை தொடர்ந்து சர்­வ­தேச கிரிக்கெட் கவுன்ஸில் டெஸ்ட் போட்­டிகள் அடிப்­ப­டை­யி­லான தர­வ­ரிசை பட்­டி­யலை வெளி­யிட்­டுள்­ளது.

இந்த தர­வ­ரி­சையில்  நட்­சத்­திர துடுப்­பாட்ட வீரர் குமார் சங்­கார, அணித்­த­லை­வரும் சகல துறை ஆட்­டக்­கா­ர­ரு­மான அஞ்­சலோ மத்­தியூஸ் மற்றும்  சுழல் பந்து வீச்­சாளர் ரங்­கன ஹேரத் ஆகிய இலங்கை அணியின் வீரர்கள் தொடர்ந்தும் ஆதிக்கம் செலுத்தி வரு­கின்­றனர்

இலங்கை அணியுடனான டெஸ்ட் தொடரில் சயீத் அஜ்மல் நீக்கப்பட்டுள்ளார்

இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பாகிஸ்தானின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் சயீத் அஜ்மல் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட், 5 ஒருநாள், இரண்டு டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

இதில் முதலாவது டெஸ்ட் போட்டி காலேவில் வருகிற 17ம் திகதி தொடங்குகிறது.

இந்நிலையில் இந்த டெஸ்ட் போட்டி தொடருக்கான பாகிஸ்தான் அணி நேற்று அறிவிக்கப்பட்டது.

இதில் பந்து வீச்சு சர்ச்சையில் சிக்கி மீண்ட நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் சயீத் அஜ்மல் நீக்கப்பட்டுள்ளார்.

தலைவர் பதவியிலிருந்து விலகுகிறேன் : செப் பிளாட்டர் அறிவிப்பு

சர்­வ­தேச கால்­பந்து சம்­மே­ள­னத்தின் தலைவர் பத­வி­யி­லி­ருந்து தான் வில­கு­வ­தாக செப் பிளாட்டர் அறி­வித்­துள்ளார்.

ஸூரிச்சில் அவ­ச­ர­மாகக் கூட்­டப்­பட்ட செய்­தி­யா­ளர்கள் கூட்டம் ஒன்­றி­லேயே அவர் இதைத் தெரி­வித்தார்.

அடுத்த தலை­வரைத் தேர்­ந்தெ­டுக்க அசா­தா­ர­ண­மான பொதுக்­கூட்டம் அழைக்­கப்­பட்டு அதில் முடி­வெ­டுக்­கப்­படும் எனவும் அவர் அறி­வித்தார்.

பெண்ணாக மாறிய ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற தடகள வீரர்...

ஒலிம்­பிக்கில் தங்கம் வென்ற, அமெ­ரிக்­காவின் முன்னாள் தட­கள வீரர், வில்­லியம் புரூஸ் ஜென்னர் பெண்­ணாக மாறி தனது பெயரை கேட்லீன் ஜென்னர் என்று மாற்­றிக்­கொண்­டுள்ளார்.

இவர் பிர­பல நடி­கை­யான  கிம் கர்­த­ஷி­யானின் வளர்ப்புத் தந்தை ஆவார்.

தற்­போது 65 வய­தான இவர் கடந்த 1976-ஆம் ஆண்டு மான்ட்­ரியல் நகரில் நடந்த ஒலிம்­பிக்கில் டெகாத்லான் போட்­டியில் தங்கப் பதக்கம் வென்­றவர்.  தட­கள வீரர் என்ற நிலையில் இருந்து தொலைக்­காட்சி தொடரில் அவர் நடிக்க ஆரம்­பித்தார்.

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் காலிறுதி : பெடரர், பெரர், முர்ரே காலி­று­திக்குள் : வெளியேறினார் சரபோவா

 

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்­டியில் ஸ்விட்­சர்­லாந்தின் ரோஜர் பெடரர், ஸ்பெயினின் டேவிட் பெரர், பிரிட்­டனின் ஆன்டி முர்ரே ஆகியோர் காலி­று­திக்கு முன்­னே­றி­யுள்­ளனர்.

பிரான்ஸ் தலை­நகர் பாரிஸில் நடை­பெற்று வரும் இந்தப் போட்­டியில் நேற்­று­முன்­தினம் நடை­பெற்ற ஆடவர் ஒற்­றையர் 4 ஆவது சுற்றில் போட்டித் தர­வ­ரி­சையில் 2 ஆவது இடத்தில் இருக்கும் ரோஜர் பெடரர் 6:3, 4:6, 6:4, 6:1 என்ற செட் கணக்கில் பிரான்ஸின் கேல் மான்­பில்ஸை தோற்­க­டித்தார்.

மான்­பில்­ஸுடன் இது­வரை 13 முறை மோதி­யி­ருக்கும் பெடரர், 9 ஆவது வெற்­றியைப் பதிவு செய்­துள்ளார்.

ஆசிய மெய்வல்லுனர் போட்டிகள் நாளை ஆரம்பம்...

எதிர்வரும் புதன்கிழமை 3ஆம் திகதி முதல் 7ஆம் திகதி வரை ஆசிய மெய்வல்லுனர் போட்டிகள் சீனாவில் நடைபெறவுள்ளது.

முதன் முறையாக 1973 ஆம் ஆண்டு பிலிப்பைன்ஸ் தலைநகர் மனிலாவில் இந்த போட்டிகள் ஆரம்பமாகியது. 
இந்த நிலையில் தற்போது 21 ஆவது முறையாக நடைபெறும் இந்த மெய்வல்லுனர் போட்டி சீன வுவான் நகரில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எக்ஸ்­பிரஸ் பிரி­மியர் லீக் கிரிக்­கெட் : சம்­பி­யன்­ பட்­டத்தை சுவீகரித்த 'விடிவெள்ளி ஸ்டார்' அணி

எக்ஸ்­பிரஸ் பிரி­மியர் லீக் கிரிக்­கெட் – 2015 ­போட்­டியின் சம்­பி­யன்­ பட்­டத்தை 'விடிவெள்ளி ஸ்டார்' அணி சுவீகரித்துக்கொண்டது. 

வீர­கே­சரி ஊழியர் நலன்­புரிச் சங்­கத்தின் ஏற்­பாட்டில் 8 அணிகள் மோதிய இந்த கிரிக்­கெட் ­போட்­டி நேற்­றைய தினம் கொழும்பு 07 ரோயல் கல்­லூரி மைதா­னத்தில் இடம்­பெற்­றது.

இத்­தொ­டரின் முத­லா­வது போட்­டியில் மித்­திரன் இலவன் அணியை எதிர்­கொண்ட விடி வெள்ளி ஸ்டார் அணி இல­கு­ வெற்­றியை பெற்­றுக்­கொண்­டது. 

இந்­நி­லையில் இறு­திப்­போட்­டிக்கு முன்­னே­றிய எச்.எம்.கே.எஸ். பண்­டார தலை­மை­யி­லான விடிவெள்ளி அணி சன்­பி­ளவர் அணியை எதிர்­கொண்­டது.

Pages

Subscribe to Virakesari Sports RSS