முப்பாய்ச்சலில் தனது சொந்த சாதனையை முறியடித்த விதூஷா லக்ஷானி

திய­கம மஹிந்த ராஜபக் ஷ விளை­யாட்­ட­ரங்கில் நேற்று ஆரம்­ப­மான 85ஆவது சேர் ஜொன் டார்பட் சிரேஷ்ட பாடசா­லைகள் மெய்­வல்­லுநர் போட்­டியில் நீர்­கொ­ழும்பு நியஸ்டெட் கல்­லூ­ரியைச் சேர்ந்த விதூஷா லக் ஷானி 20 வய­துக்­குட்­பட்ட பெண்­க­ளுக்­கான முப்­பாய்ச்­சலில் தனது சொந்த சாத­னையை முறி­ய­டித்தார்.

கடந்த வருடம் நடை­பெற்ற 84ஆவது அத்­தி­யா­யத்தில் 12.50 மீற்றர் தூரம் பாய்ந்து நிலை­நாட்­டிய தனது சொந்த சாத­னையை லக் ஷானி இம் முறை 13.05 மீற்றர் தூரம் பாய்ந்து முறி­ய­டித்தார்.

பகலிரவு டெஸ்ட் போட்டிக்கு மிளிரும் பந்துகள் அறிமுகம்

ஐந்து நாட்கள் நடை­பெறும் டெஸ்ட் போட்­டி­களில் சுவா­ரஸ்­யத்தை ஏற்­ப­டுத்­தவும், ரசி­கர்­களை மைதா­னத்­திற்கு இழுக்­கவும் பக­லி­ரவு டெஸ்ட் போட்­டி­களை நடத்த ஐ.சி.சி. நீண்ட கால­மாக முயற்­சித்து வரு­கி­றது.

எதிர்­வரும் செம்­டெம்பர் மாதத்தில் அவுஸ்­தி­ரே­லியா-  நியூ­சி­லாந்து அணிகள் முதல் பக­லி­ரவு டெஸ்ட் போட்­டியில் மோத­வுள்­ளன. இந்த போட்­டியில் முதன் முத­லாக ரோஜா நிறத்­தி­லான  கிரிக்கெட் பந்து பயன்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளது.

பிரேசில் கால்பந்து ஜாம்பவான் ஜிடோ மரணம்

1958 மற்றும் 1962-ஆம் ஆண்­டு­களில் உலக கிண்­ணத்தை வென்ற பிரேசில் கால்­பந்து அணியில் இடம் பிடித்து இருந்த நடு­கள வீரர் ஜிடோ (வயது 82) கடந்த ஆண்டு பக்க வாத நோயால் பாதிக்­கப்­பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் அவர் நேற்­று­முன்­தினம் மரணம் அடைந்­த­தாக அவுஸ்­தி­ரே­லிய கால்­பந்து கூட்­ட­மைப்பு அறி­வித்­துள்­ளது. 

பிரேசில் கால்­பந்து அணியின் முன்னாள் கதா­நா­யகன் பீலே­வுடன் இணைந்து ஆடிய ஜிடோ 1962-ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் இறு­திப்­போட்­டியில் கோல் அடித்­தவர் ஆவார்.

கோபா அமெரிக்கா கால்பந்தாட்ட தொடர்: போராடி வென்றது பிரேசில்...

சிலியில் நடை­பெற்று வரும் கோபா அமெ­ரிக்கா கால்­பந்து போட்­டியில் பெரு அணியை கடும் போராட்­டத்­துக்குப் பிறகு 2-–1 என்ற கோல் கணக்கில் வென்­றது பிரேசில் அணி.

சிலியில் நடை­பெறும் கோபா அமெ­ரிக்கா கால்­பந்து போட்டித் தொடரில் 'சி'-பி­ரிவு ஆட்­டத்தில் பிரேசில் - பெரு அணி­க­ளுக்கு இடை­யி­லான போட்டி மிகவும் விறு­வி­றுப்­பாக அமைந்­தது. தொடக்கம் முதலே இரு அணி வீரர்­களும் சிறப்­பாக விளை­யா­டினர்.

இலங்கை- பாகிஸ்தான் டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பம்...

சம பலம் கொண்ட இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது. 

அமெரிக்க கால்பந்தாட்ட தொடர்: ஆர்ஜன்டீனாவுக்கு பரகுவே அதிர்ச்சி கொடுத்தது

சிலியில் நடை­பெறும் கோபா அமெ­ரிக்கா கால்­பந்து பி-பி­ரிவு ஆட்­டத்தில் 2 கோல்கள் பின் தங்­கி­யி­ருந்த பர­குவே, இடை­வே­ளைக்குப் பிறகு 2 கோல்­களைத் திருப்பி ஆர்­ஜன்­டீனா அணிக்கு எதி­ரான ஆட்­டத்தை அபா­ர­மாக சம­நி­லையில் முடித்து அவ்­வ­ணிக்கு அதிர்­ச்சி­கொ­டுத்­தது.

முதல் பாதி­யி­லேயே ஆர்­ஜன்­டீ­னாவின் பிர­பல வீரர்­க­ளான செர்­ஜியோ அக்­யூரோ மற்றும் லயோனல் மெஸ்ஸி ஆகியோர் 2 கோல்­களை அடித்து விட்­டனர்.

ஆனால் இடை­வே­ளைக்கு பிறகு ஆச்­ச­ரி­ய­க­ர­மான ஆட்­டத்தை வெளிப்­ப­டுத்­திய பரா­குவே அணியில் நெல்சன் ஹேடோ வால்டேஸ், லூகாஸ் பேரியஸ் ஆகியோர் 2 கோல்­களை அடித்­தனர்.

சாதனை புரிந்த வீர வீராங்கனைகள் கௌரவித்தது அமைச்சு : ரூ. 42 இலட்சம் பெறுமதியான பணப்பரிசுகள் வழங்கப்பட்டன

விளை­யாட்டை எடுத்­துக்­கொண்டால் பெரு­மைப்­ப­டக்­கூ­டிய சிறந்த­தொரு வர­லாற்றை நாம் கொண்­டுள்ளோம்.

இதை அப்­ப­டியே முன்­ந­கர்த்தி எதிர்­வரும் காலங்­களில் சர்வ­தேச அளவில் எமது திற­மை­களை நிரூ­பிக்க வேண்டும்

.அதற்கு தேவை­யான அனைத்­தையும் விளை­யாட்­டுத்­துறை அமைச்சு செய்­து­கொ­டுக்கும் என்று விளையாட்­டுத்­துறை மற்றும் சுற்­று­லாத்­துறை அமைச்சர் நவீன் திஸா­நா­யக்க தெரி­வித்தார்.

அப்போது ஏழ்­மை­யான குடும்­பத்தில் பிறந்த மேவெதர் :இப்போது பணத்தில் தூங்கும் வீரர்

12மாதங்­களில் விளை­யாட்டு மூலம் அதிகம் சம்­பா­தித்­துள்ள 100 விளை­யாட்டு வீரர்­களின் பட்­டி­யலை போர்ப்ஸ் இதழ் வெளி­யிட்­டுள்­ளது.

இதில் பிர­பல அமெ­ரிக்க குத்­துச்­சண்டை வீரர் மேவெதர் 300 மில்­லியன் அமெ­ரிக்க டொலர்கள் வரு­மா­னத்­துடன் முத­லிடம் பிடித்தார்.

அண்­மையில் லாஸ் வேகாஸ் நகரில் நடை­பெற்ற குத்­துச்­சண்டை போட்­டியில் மேனி பேக்­கி­யோவை வீழ்த்­தி­யதால் மட்டும் 3600 கோடி ரூபாயை மேவெதர் சம்­பா­தித்­தி­ருந்­தது குறிப்­பி­டத்­தக்­கது.

15ஆவது கோல் : வரலாறு படைத்தார் மார்ட்டா...

பெண்­க­ளுக்­கான உலகக் கிண்ணக் கால்­பந்து போட்டி கன­டாவில் நடந்து வரு­கி­றது.

இதில் நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் பிரேசில் அணி 2–0 என்ற கோல் கணக்கில் தென்­கொ­ரி­யாவை வீழ்த்தி­யது.

இதில் 2ஆ-வது கோலை பிரேசில் முன்­னணி வீராங்கனை 29 வயதான மார்ட் டா ‘பெனால்டி’  வாய்ப்பில் அடித்தார். 

உலக கிண்­ணத்தில் இது மார்ட்­டாவின் 15ஆவது கோலாகும்.

இதன் மூலம் பெண்கள் உலக கிண்ண வர­லாற்றில் அதிக கோல்கள் அடித்­த­வ­ரான ஜெர்­ம­னியின் பிர்ஜிட் பிரின்சின் சாத­னையை (14 கோல்) தகர்த்தார். 

13 நிமிடத்தில் வெற்றிபெற்ற பேட்மிண்டன் வீரர்

தென்­கி­ழக்கு ஆசிய போட்டி சிங்­கப்­பூரில் நடை­பெற்று வரு­கி­றது.

இதில் நேற்று மலே­சிய அணிக்கும், கம்­போ­டியா அணிக்கும் இடையே பேட்­மிண்டன் போட்டி நடை­பெற்­றது.

இதில் மலே­சி­யாவின் முன்­னணி வீரர் லீ சோங் வெய், கம்­போ­டி­யாவின் செங் போர் போம் என்­ப­வரை எதிர்­கொண்டார். இதில் வெய் 21-–10, 21–-5 என்ற கணக்கில் வென்றார்.

இந்த வெற்­றியை பெற அவ­ருக்கு 13 நிமி­டங்கள் மட்­டுமே தேவைப்­பட்­டது.

இந்த வெற்­றியின் மூலம் மலே­சிய அணி 3-–0 என வென்று அரை­யி­று­திக்கு முன்­னே­றி­யது.

அரை­யி­று­தியில் மலே­சிய அணி இந்­தோ­னே­சி­யாவை எதிர்­கொள்­கி­றது.

Pages

Subscribe to Virakesari Sports RSS