பாகிஸ்தானுக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் : அசத்தியது...! இலங்கை

பாகிஸ்­தா­னுக்கு எதி­ரான 2 ஆவது டெஸ்ட் போட்­டியில் இலங்கை அணி 7 விக்கெட் வித்­தி­யா­சத்தில் வெற்றி பெற்­றுள்­ளது.

இலங்கை விஜயம் மேற்­கொண்­டுள்ள பாகிஸ்தான் அணி 3 போட்­டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்­கேற்­று­வ­ரு­கி­றது.

காலியில் நடந்த முதல் டெஸ்ட் போட்­டியில் பாகிஸ்தான் 10 விக்­கெட்­டு­களால் வென்­றது. இரண்­டா­வது டெஸ்ட் போட்­டி  கொழும்பு சரா ஓவல் மைதா­னத்தில் இடம்­பெற்­றது.

இதில் பாகிஸ்தான் அணி முதல் இன்­னிங்சில் 138 ஓட்­டங்­க­ளுக்குள் சுருண்­டது. ஹபீஸ் அதி­க­பட்­ச­மாக 42 ஓட்­டங்கள் எடுத்தார். பந்­து­வீச்சில் தரிந்து கௌஷால் 5 விக்கெட்களை வீழ்த்­தினார்.

சண்டையினூடே சிலி வெற்றி ; நடப்பு சம்பியன் நடையை கட்டியது...!

கோபா அமெ­ரிக்கா கால்­பந்து தொடரில் நடந்த காலி­றுதி ஆட்­டத்தில் சிலி அணி 1–-0 என்ற கோல் கணக்கில் நடப்பு சம்­பியன் உரு­குவே அணியை வீழ்த்­தி­யது.

சான்­டி­யா­கோவில் நடந்த இந்த ஆட்­டத்தில் 62ஆவது நிமி­டத்தில் சிலி வீரர் ஜாராவை முகத்தில் தாக்­கிய உரு­குவே அணியின் முன்­னணி வீரர் எடிசன் கவானி மஞ்சள் அட்டை பெற்றார்.

ஜாரா, எடிசன் கவா­னியின் பின்­பு­றத்தை தட்டி அநா­கரிக­மாக நடந்­த­தை­ய­டுத்து எடிசன் கவாசி அவரை அடித்­த­தாக கூறப்­ப­டு­கி­றது.

தொடர்ந்து லைன்ஸ்­மே­னிடம் சென்று எடிசன் கவானி தக­ராறில் ஈடு­பட்டார்.

கௌஷால் அபா­ர­மாக பந்­து­ வீச்சு : 138 ஓட்டங்களுக்கு சுருண்டது பா­கிஸ்தான்

இலங்­கை – பா­கிஸ்தான் அணி­க­ளுக்கு இடை­யி­லான 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்­டியில் தரிந்து கௌஷால் அபா­ர­மாக பந்­து­வீசி 5 விக்­கெட்­டுக்­களை வீழ்த்­தினார்.

இதனால் பாகிஸ்தான் அணி 138 ஓட்­டங்­க­ளுக்கு சகல விக்­கெட்­டுக்­க­ளையும் பறி­கொ­டுத்­தது.

நேற்று கொழும்பு பி.சர­வ­ண­முத்து மைதா­னத்தில் ஆரம்­ப­மான இரண்­டா­வது டெஸ்ட் கிரிக்கெட் போட்­டியில் நாணய சுழற்­சியில் வெற்­றி­பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்­பெ­டுத்­தாடத் தீர்­மா­னித்­தது. 

மகளிர் உலக கிண்ண கால்பந்து போட்டி : நெதர்லாந்தை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தது ஜப்பான்

ஏழா­வது மகளிர் உலக கிண்ண கால்­பந்து போட்டி கன­டாவில் நடை­பெற்று வரு­கி­றது.

இந்­திய நேரப்­படி நேற்று காலை கடைசி 2 ஆவது சுற்று ஆட்டம் நடந்­தது. இதில் நடப்பு சாம்­பியன் ஜப்பான், நெதர்­லாந்து அணிகள் மோதின.

இதில் நெதர்லாந்தை வீழ்த்தி ஜப்பான் 2 :1 என்ற கோல் கணக்கில் வென்று கால்­இ­று­திக்கு தகுதி பெற்­றது. 

2 ஆவது சுற்று முடிவில் ஜெர்­மனி, சீனா, ஆஸ்­தி­ரே­லியா, பிரான்ஸ், கனடா, இங்­கி­லாந்து, அமெ­ரிக்கா, ஜப்பான் ஆகிய அணிகள் கால்­இ­று­திக்கு தகுதி பெற்­றன.

அரோனை தாக்கியது பந்து : ரத்த வாந்தி எடுத்ததால் பரபரப்பு

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் அரோன் பிஞ்ச், இங்கிலாந்தில் நடக்கும் உள்ளூர் 20 ஓவர் கிரிக்கெட்டில் யார்க்ஷைர் அணிக்காக விளையாடி வருகிறார்.

ஒர்செஸ்டர்ஷைர் அணிக்கு எதிராக விளையாடிய போது, வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் ரஸ்செல் வீசிய பந்து, அவரது நெஞ்சில் பலமாக தாக்கியது. 

வலியால் துடித்த ஆரோன் பிஞ்ச் உடனடியாக வெளியேறினார்.

அப்போது ரத்த வாந்தியும் எடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

 

தோல்வியின் எதிரொலி : பதவி விலக தயார் என தோனி அறிவிப்பு

தோல்­விக்கு நான்தான் காரணம் என்றால், பத­வி­யி­லி­ருந்து விலக தயார் என இந்­திய கிரிக்கெட் அணியின் தலைவர் தோனி தெரி­வித்­துள்ளார்.

முதல் முறை­யாக இந்­தி­யா­விற்கு எதி­ரான தொடரை வென்று பங்­க­ளாதேஷ் வர­லாற்று சாதனை படைத்­துள்­ளது.

இந்­நி­லையில், இந்­திய அணி­த­லைவர் தோனி, செய்­தி­யாளர் சந்­திப்பின் போது­பின்­வ­ரு­மாறு கருத்து வெளி­யிட்­டுள்ளார்.

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய மொஹமட் ஹபீஸ்...

பாகிஸ்தான் அணியின் சக­ல­துறை ஆட்­டக்­காரர் மொஹமட் ஹபீஸின் பந்­து­வீச்சில் சந்­தேகம் ஏற்­பட்­டுள்­ள­தாக மீண்டும் குற்றம் சுமத்­தப்­பட்­டுள்­ளது. 

ஏற்­க­னவே கடந்த ஆண்டு ஐ.சி.சி. நிர்­ண­யித்த விதி­மு­றைக்கு மாறாக பந்து வீசு­வ­தாக குற்றம் சுமத்­தப்­பட்டு தடை விதிக்­கப்­பட்­டது.

இந்­நி­லையில், கடந்த ஏப்ரல் மாதம் இந்­நி­யாவில் நடந்த பரி­சோ­த­னையில் ஹபீ­ஸுக்கு சாத­க­மான தீர்ப்பு கிடைத்­தது. 

இந்த நிலையில்  ஹபீஸின் பந்­து­வீச்சு குறித்து மீண்டும் நடு­வர்­களால் குற்­றச்­சாட்டு முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது.

சொந்த மண்ணில் அடுத்தடுத்து 10 வெற்றிகள் : பங்களாதேஷ் புதிய சாதனை

சொந்த மண்ணில் பங்களாதேஷ் அணி தொடர்ச்­சி­யாக சுவைத்த 10 ஆவது வெற்றி இது­வாகும்.

ஏற்­க­னவே சிம்­பாப்வே (5-0) மற்றும் பாகிஸ்­தானை (3-0) ‘வெள்­ளை­ய­டிப்பு’ செய்த பங்­கா­ளதேஷ் அணி இப்­போது இந்­தி­யா­வுக்கு எதி­ரான தொட­ரிலும் 2 வெற்­றி­களை பெற்­றி­ருக்­கி­றது.

அடுத்த போட்­டி­யிலும் வெற்­றி­பெற்றால் அடுத்­த­டுத்து சொந்த மண்ணில் மூன்று தொடர்­களை வெ ள்ளைய­டிப்பு செய்த பெரு­மையை பங்­க­ளாதேஷ் அணி தன­தாக்­கிக்­கொள்ளும். 

இந்­திய மற்றும் பங்­க­ளாதேஷ் அணி­க­ளுக்கு இடை­யி­லான இரண்­டா­வது சர்­வ­தேச ஒருநாள் போட்டி நேற்­று­முன்­தினம் இடம்­பெற்­றது.

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடர் : முதல் போட்டியை தன் வசமாகிய பாகிஸ்தான்...

இலங்கை-–பாகிஸ்தான் அணி­க­ளுக்கு இடை­யி­லான முதல் டெஸ்ட் போட்டி காலியில் கடந்த புதன் கிழமை ஆரம்­பிக்­கப்­ப­ட­வி­ருந்த போதிலும் போட்­டியின் முதல்நாள் மழையால் பாதிக்­கப்­பட்­டது.

இந்­நி­லையில் இரண்டாம் நாள் போட்டி தாம­தித்தே ஆரம்­ப­மா­னது

நாணயச் சுழற்­சியில் வெற்­றி­பெற்ற  பாகிஸ்தான் களத்­த­டுப்பை தெரிவு செய்­தது. 

அதன்­படி முதல் இன்­னிங்சை ஆரம்­பித்த இலங்கை அணி குஷால் சில்வா சதத்­துடன் சகல விக்­கெட்­டு­க­ளையும் பறி­கொ­டுத்து 300 ஓட்­டங்­களை மாத்­தி­ரமே பெற்­றுக்­கொண்­டது.

இலங்கை அணி அசத்தல் : சதம் விளாசினார் கவுஷால் சில்வா...

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் கவுஷால் சில்வா சதம் விளாசினார்.

இலங்கை சென்றுள்ள பாகிஸ்தான் அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் காலேயில் நடக்கிறது.

முதல் நாள் ஆட்டம் மழையால் ரத்தானது. நேற்று 2ம் நாள் ஆட்டம் நடந்தது. நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணித்தலைவர் மிஸ்பா, களத்தடுப்பை தெரிவு செய்தார்.

இதைத் தொடர்ந்து களமிறங்கிய இலங்கை அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் கருணாரத்னே (21) ஏமாற்றினார்.

பின் ஜோடி சேர்ந்த கவுஷால் சில்வா, சங்கக்காரா ஜோடி சிறப்பாக விளையாடியது.

Pages

Subscribe to Virakesari Sports RSS