யூனிஸ் கான் இரட்டைச் சதத்தால் ஆஸி பரிதவிப்பு

அபு தாபியில் நடைபெற்றுவரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் யூனிஸ்  
காண் குவித்த இரட்டைச் சதத்தின் உதவியுடன் பாகிஸ்தான் முதலாவது  
இன்னிங்ஸில் 6 விக்கட்களை இழந்து 570 ஓட்டங்களைக் குவித்து  
பலம்வாய்ந்த நிலையில் இருக்கின்றது.
போட்டியின் மூன்றாம் நாளான இன்று சற்று நேரத்திற்கு முன்னர்  
அவஸ்திரேலியா அதன் முதல் இன்னிங்ஸில் 2 விக்கட்களை இழந்து 66  
ஓட்டங்களைப் பெற்றிருந்தது

 

சயிட் அஜ்மால் ஐ.சி.சி.யினால் அதிரடியாக நீக்கம்: முறையற்ற பந்து வீச்சு என நிரூபணம்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் சயிட் அஜ்மால் ஐ.சி.சி.யினால் அதிரடியாக இடைநிறுத்தப்பட்டுள்ளார். சயிட் அஜ்மாலின் பந்து வீச்சு முறையற்றது என நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்தே அவர் இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

ஆஸி.யை வீழ்த்தி சாம்பியனாது தென்னாபிரிக்கா, நழுவியது டு பிளிஸ்சிஸ் சாதனை

முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தி தென்னாபிரிக்க அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. டு பிளிஸ்சிஸ் சாதனை சதத்தை நழுவ விட்டார்.

 தென்னாபிரிக்கா, அவுஸ்திரேலியா, ஜிம்பாப்வே ஆகிய அணிகள் இடையிலான ஒரு நாள் கிரிக்கெட் போட்டித் தொடர் ஜிம்பாப்வேயில் நடைபெற்றது. இதில் லீக் சுற்று முடிவில் முதல் இரு இடங்களை பிடித்த  தென்னாபிரிக்கா, அவுஸ்திரேலிய அணிகள் கிண்ணத்துக்கான இறுதி ஆட்டத்தில் ஹராரே மைதானத்தில் நேற்று சந்தித்தன.

 

Pages

Subscribe to Virakesari Sports RSS