பாகிஸ்தானுக்கு எதிரான 20 ஓவர் போட்டிக்கு இலங்கை அணியில் புதுமுக வீரர்கள்

இலங்கை – பாகிஸ்தான் அணி­க­ளுக்­கி­டையில் நடை­பெ­ற­வுள்ள 20 ஓவர் கிரிக்கெட் போட்­டிக்­கான இலங்கை அணி அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இதில் 5 புது­முக வீரர்­களை இணைத்­துக்­கொண்­டுள்­ளது இலங்கை.

பாகிஸ்தான் அணி இலங்­கையில் சுற்றுப் பயணம் மேற்­கொண்டு விளை­யாடி வரு­கின்­றது.

இரு அணி­க­ளுக்கு இடை­யி­லான டெஸ்ட் தொடரை பாகிஸ்தான் 2–-1 எனக் கைப்­பற்­றி­யது. அதேபோல் தற்­போது நடை­பெற்று வரும் ஒருநாள் தொடரை 3–1 எனக் கைப்­பற்றி முன்­னி­லையில் உள்­ளது.

5ஆ-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி எதிர்­வரும் 26ஆம் திகதி நடை­பெ­ற­வுள்­ளது.

மோட்டார் சைக்கிள் ஓட்டப்போட்டி : இரு வீரர்கள் மரணம்

அமெ­ரிக்­காவில் உள்ள கலி­போர்­னியா மாகா­ணத்தில் இடம்­பெற்­று­வரும் உலக சூப்­பர்பைக் சாம்­பி­யன்ஷிப் போட்­டியின் போது இரு வீரர்கள் விபத்­துக்­குள்­ளாகி மர­ண­ம­டைந்­துள்­ளனர்.  

இந்த மோட்டார் சைக்கில் பந்­த­யத்தில்  பல்­வேறு நாட்டு வீரர்கள் கலந்து கொண்­டுள்­ளனர்.

இதில், முதல் சுற்று பந்­த­யத்­தின்­போது ஸ்பெயின் நாட்டின் 35 வய­தான மார்ட்னெஸ் மற்றும் 27 வய­தான ரிவாஸ் ஆகியோர் கலந்­து­கொண்னர்.

போட்டி ஆரம்­பிக்­கப்­பட்டு சில வினா­டி­களில் அவர்­களின் மோட்டார் சைக்கில், பாதையை விட்டு விலகி விபத்­துக்­குள்­ளா­னது.

தென் ஆபிரிக்காவை மிரட்டும் முஸ்தபிகுர் ரஹ்மான்....!

பங்­க­ளாதேஷ் - தென்­னா­பி­ரிக்க அணி­க­ளுக்கு இடை­யி­லான முத­லா­வது டெஸ்ட் போட்டி சிட்­டகொங் நகரில் நேற்று ஆரம்­ப­மா­னது. நாண­யச்­சு­ழற்­சியில் வென்ற தென்­னா­பி­ரிக்க அணி முதலில் துடுப்­பெ­டுத்­தாட தீர்­மா­னித்­தது

அதன்­படி ஆரம்ப துடுப்­பாட்ட வீரர்­க­ளாக களம் இறங்­கிய டீன் எல்கர் 47  ஓட்­டங்­க­ளையும், வான் சைல் 34 ஓட்­டங்­க­ளையும், அடுத்து வந்த டு பிலெசிஸ் 48 ஓட்­டங்­க­ளையும் பெற்று ஆட்­ட­மி­ழந்­தனர். முதல் மூன்று வீரர்­களும் அணிக்கு ஓர­ள­விற்கு நல்ல ஆரம்­பத்தை ஏற்­ப­டுத்­தி­ய­மையால் " தென்­னா­பி­ரிக்க அணி 3 விக்கெட் இழப்­பிற்கு 136 ஓட்­டங்­களை எடுத்­தி­ருந்­தது.

பாகிஸ்தான் 135 ஒட்டங்களால் அபார வெற்றி

இலங்­கைக்கு எதி­ரான மூன்­றா­வது ஒருநாள் போட்­டியில் பாகிஸ்தான் அணி 135 ஓட்­டங்­களால் வெற்­றி­யீட்­டி­யுள்­ளது. 

ஐந்து ஒருநாள் போட்­டிகள் கொண்ட தொடரில் முன்­ன­தாக நடந்து முடிந்த இரு போட்­டி­க­ளிலும் இரு அணி­களும் தலா ஒரு வெற்­றி­களைப் பெற்று 1- :1 என சம­நி­லையில் உள்­ளன. 

இந்­த­நி­லையில் இரு அணி­க­ளுக்கும் இடை­யி­லான மூன்­றா­வது ஒருநாள் போட்டி நேற்று முன்­தினம் கொழும்பு ஆர்.பிரே­ம­தாஸ மைதா­னத்தில் இடம்­பெற்­றது. 

இதில் நாணய சுழற்­சியில் வென்ற பாகிஸ்தான் முதலில் துடுப்­பெ­டுத்­தாடத் தீர்­மா­னித்­தது. 

பளு தூக்கும் போட்­டி : எடையை தாங்க முடியாமல் சரிந்து விழுந்த வீராங்கனை

கன­டாவில் நடந்த பளு தூக்கும் போட்­டியின் போது ஏற்­பட்ட திடீர் நிலை­கு­லைவால், வெனி­சு­லாவைச் சேர்ந்த பளு தூக்கும் வீராங்­க­னை­யான ஜெனிசிஸ் ரோட்­ரிகஸ் கோமஸ் சரிந்து விழுந்­தது பலரை அதிர்ச்­சிக்­குள்­ளாக்­கி­யது. 

ஒன்­டா­ரியோ மாகாண தலை­நகர் டொராண்­டோவில் அண்­மை யில் நடந்த  ‘பான் ஏம்’ விளை­யாட்டுப் போட்­டியில் கோமஸ் கலந்து கொண்டார்.

233 பவுண்ட் (106 கிலோ) எடைப்­பி­ரிவு பளு தூக்கும் போட்­டியில் அவர் பங்­கேற்ற போதுதான் இந்த அசம்­பா­விதம் நடந்­தது.

சென்னை, ராஜஸ்தானுக்கும் 2 தடை : குருநாத் மெய்யப்பன் – ராஜ்குந்த்ராவுக்கு வாழ்நாள் தடையாம்

ஐ.பி.எல். தொடர் 2013-இல் மேட்ச் பிக்சிங் நடந்­தது கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது. இதில் ராஜஸ் தான் அணி வீரர்கள் மூன்று பேர் வாழ்நாள் தடை பெற்­றனர்.

மேலும் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணி உரி­மை­யா­ளர்­களும் இதில் கலந்து கொண்­ட­தாக குற்­றம்­சாட்­டப்­பட்­டது. 

இதனால் முட்கல் தலை­மை­யி­லான ஒரு குழு இந்த ஊழல் குறித்து விசா­ரணை நடத்தி இந்திய உயர் ­நீ­தி­மன்­றத்தில் அறிக்கை தாக்கல் செய்­தது. 

ரோசாவ்வுக்கு அபராதம்?

பங்­க­ளாதேஷ் வீரர் தமீம் இக்­பாலை இடித்து தள்­ளிய தென்­னா­பி­ரிக்க வீரர் ரோசா­வ்வுக்கு 50 சத­வீதம் வரை அப­ராதம் விதிக்­கப்­படும் வாய்ப்­புள்­ளது என தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

டாக்­காவில் நடை­பெற்ற 2வது ஒருநாள் போட்­டியில் பங்­க­ளாதேஷ் - தென்­னா­பி­ரிக்க அணிகள் மோதின. இதில் தென்­னா­பி­ரிக்க 162 ஓட்­டங்­க­ளுக்கு சுருண்­டது.

இதைத் தொடர்ந்து பங்­க­ளாதேஷ் எளிய இலக்கை நோக்கி கள­மி­றங்­கி­யது. இதில் ஆரம்ப துடுப்­பாட்ட வீர­ராக தமீம் இக்பால் விளை­யா­டினார்.

ஆஷஸ் தொடர் : ஆஸியை வீழ்த்தியது இங்கிலாந்து

ஆஷஸ் தொடரின் முத­லா­வது டெஸ்ட் கிரிக்கட் போட்­டியில்  அவுஸ்­தி­ரே­லி­யாவை வீழ்த்தி இங்­கி­லாந்து 169 ஓட்­டங்­களால் அபார வெற்­றி­யீட்­டி­யது. 

 அவுஸ்­தி­ரே­லியா மற்றும் இங்­கி­லாந்து அணி­க­ளுக்­கி­டையில் கார்டிவ், சொஃபியா விளை­யாட்­ட­ரங்கில் நடை­பெற்ற முத­லா­வது போட்­டியில் வெற்­றி­பெற்ற இங்­கி­லாந்து 1 க்கு 0 என முன்­னிலை வகிக்­கி­றது.

412 ஓட்­டங்கள் என்ற வெற்றி இலக்கை இரண்டு தினங்­களில் பெற­வேண்டும் என்ற நிலையில் நேற்­று­முன்­தினம் காலை தனது இரண்­டா­வது இன்­னிங்ஸை அவுஸ்­தி­ரே­லியா ஆரம்­பித்­தது.

புதிய சாதனை படைத்­த கிறிஸ் கெயில்...

இரு­பது ஓவர் போட்­டிகளில் 8 ஆயி ரம் ஓட்­டங்­களை எட்­டிய முதல் கிரிக் கெட் வீரர் என்ற புதிய சாத­னையை மேற்­கிந்­திய தீவுகள் வீரர் கிறிஸ் கெயில் படைத்­துள்ளார். கரீ­பியன் பிரி­மீயர் லீக்கில் நடந்த 16ஆவது லீக் ஆட்­டத்தில் ஜமைக்கா டல்­லாவஸ் அணி­யுடன் லூசியா சூக்ஸ் அணி மோதி­யது.

முதலில் துடுப்­பெ­டுத்­தா­டிய லூசியா சூக்ஸ் அணி 20 ஓவர்­களில் 4 விக்கெட் இழப்­புக்கு 158 ஓட்­டங்­களைப் பெற்­றது. 

தொடர்ந்து ஜமைக்கா அணி துடுப்­பெ­டுத்­தாடி யது. இதில் கிறிஸ் கெயில் கடைசி வரை ஆட்­ட­மி­ழக்­காமல் நின்று 64 ஓட்­டங்­களைப் பெற்றார்.

பந்து தாக்கி இலங்கை வீரர் மரணம் : அதிர்ச்சியில் கிரிக்கெட் உலகம்...

கிரிக்கெட் விளை­யாட்டின் போது, பந்து தாக்கி இலங்­கையைச் சேர்ந்த வீரர் பலி­யான சம்­பவம் கிரிக்கெட் உல­கத்தை அதிர்ச்­சியில் ஆழ்த்­தி­யுள்­ளது.

இங்­கி­லாந்து தலை­ந­க­ரான லண்­டனில் தமிழ் லீக் 3 ஆவது டிவிஷன் என்ற உள்ளூர் கிரிக்கெட் போட்டி நடை­பெற்று வரு­கி­றது. இதில் விளை­யா­டிய இலங்­கையைச் சேர்ந்த பாவலன் பத்­ம­நாதன் துடுப்­பெ­டுத்­தாடும் போது எதி­ர­ணி­யினர் வீசிய பந்து அவ­ரது நெஞ்சில் பல­மாக தாக்­கி­யது.

வலியால் துடித்த பாவலன் முதலில் தான் நன்­றாக இருப்­ப­தாக கையால் சைகை காட்­டினார். ஆனால் சில அடி தூரம் நடந்த அவர் சுருண்டு கீழே விழுந்தார்.

Pages

Subscribe to Virakesari Sports RSS