மோடியால் பறிபோன பதவி...!

இந்­திய அணி சிம்­பாப்வேயுடன் மோதிய தொடரில் ரெய்னாதான் தலைவராக நியமிக்கப்பட விருந்தாராம்.  

சிம்­பாப்வே செல்­ல­வுள்ள இந்­திய அணிக்­கான வீரர்­களை தேர்வு செய்­வ­தற்­கு இரு நாட்க­ளுக்கு முன்ன­தா­கத் தான் சுரேஷ் ரெய்னா, பிராவோ, ரவீந்­திர ஜடேஜா ஆகியோர்,  சூதாட்டத்தில் ஈடுபட் டதாக லலித் மோடி, ஐ.சி.சி.க்கு அனுப்­பிய கடிதம் குறித்த தகவல் வெளி­யா­கி­யி­ருந்­தது.

இதனால்தான் அவரை தெரிவுசெய்ய வில்லையாம்.

உலக வெல்டர்வெயிட் குத்துச்சண்டை : மேவெதருடன் மோதுகிறார் பெர்ட்டோ!

வெல்­டர்­வெயிட் குத்­துச்­சண்­டையில் உலக சம்­பி­ய­னான அமெ­ரிக்­காவின் புளோயிட் மேவெதர், இவர் கடை­சி­யாக எதிர்வரும் செப்டெம்பர் 12ஆம் திகதி லோஸ் வெகாசில் நடை­பெறும் குத்­துச்­சண்டை போட்­டியில் கலந்­து­கொண்­டு­விட்டு, குத்­துச்­சண்டைப் போட்­டி­க­ளி­லி­ருந்து விடை­பெ­ற­வுள்­ள­தாகத் தெரி­விக்­க­ப­டு­கி­றது. 

அவ­ருடன் மோதும் வீரர் விவ­ரத்தை போட்டி அமைப்­பா­ளர்கள் தற்­போது அறி­வித்­துள்­ளனர்.

60 ஓட்டங்களில் சுருண்டது ஆஸி....!

இங்­கி­லாந்து - அவுஸ்­தி­ரே­லிய அணி­க­ளுக்கு இடை­யி­லான ஆஷஸ் தொடரின் 4-ஆவது டெஸ்ட் நாட்­டிங்­காமில் உள்ள டிரென்ட் பிரிட்ஜ் மைதா­னத்தில் நேற்று தொடங்­கி­யது.

இதில் நாணய சுழற்­சியில் வெற்­றி­பெற்ற  இங்­கி­லாந்து அணித் தலைவர் குக் களத்­த­டுப்பை தேர்வு செய்தார்.

காலையில் மழை பெய்­ததால் பந்து வீச்­சுக்கு ஆடு­களம் சாத­க­மாக இருக்கும் என்­பதால் குக் இந்த முடிவை எடுத்தார்.

மைதானத்தில் ஜனாதிபதி...!

சிறுநீரக நோய் ஒழிப்பு விளம்பரத் தூதுவர்களாக முரளிதரன், டில்ஷான்
சிறு­நீ­ரக நோய் ஒழிப்பு விளம்­பரத் தூது­வர்­க­ளாக முர­ளி­தரன், டில்ஷான் ஆகியோர் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வினால் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளனர்.

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணி­க­ளுக்­கி­டையில் நடை­பெற்ற இரண்­டா­வது இரு­ப­துக்கு 20 போட்­டியின் போதே இவர்­க­ளுக்­கான நிய­ம­னக்­க­டி­தங்கள் வழங்­கப்­பட்­டுள்­ளன.

சிறு­நீ­ரக நோய் ஒழிப்பு தொடர்பில் உரிய நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால உறு­தி­ய­ளித்­துள்ள நிலையிலேயே இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை - பாகிஸ்தான் முதலாவது இருபதுக்கு 20 போட்டி இன்று...!

பாகிஸ்தான் வீரர்கள்

 • சஹிட் அப்ரிடி (தலைவர்)
 • அஹமட் செஷாட்
 • நௌமன் அன்வர்
 • மொஹமட் ஹபீஸ்
 • முக்தார் அஹமட்
 • உமர் அக்மல்
 • சுஹைப் மலிக்
 • மொஹமட் ரில்வான்
 • சப்ராஸ் அஹமட்
 • யாஷிர் ஷா
 • சுஹைல் தன்விர்
 • இமாட் வசீம்
 • அன்வர் அலி
 • மொஹமட் இர்பான்
 • ​ஷியா உல் ஹக்

இலங்கை வீரர்கள்

வேகப்பந்து வீச்சாளர் துஸ்மந்த சமீர நீக்கம்

இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் துஸ்மந்த சமீர இந்திய அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் பங்குகொள்ள மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா இந்திய அணிக்கு எதிராக இலங்கை அணி பங்குகொள்ளும் முதலாவது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 12 ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரையில் காலியில் இடம்பெறவுள்ளது.

இந்த நிலையில், உபாதைக்கு உள்ளாகியிருக்கும் சமீர போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் நடந்து முடிந்த பாகிஸ்தான் அணிக்கு எதிரான இறுதி டெஸ்ட் போட்டியிலும் ஐந்து ஒரு நாள் போட்டிகளிலும் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய சாதனை : மகிழ்ச்சியில் முஸ்தாபிஸூர் ரஹ்மான்

அறி­மு­க­மான டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்­டியில் ஆட்ட நாயகன் விருது  பெற்ற ஒரே வீரர் என்ற பெரு­மையை பங்­க­ளாதேஷ் வீரர் முஸ்­தா­பிஸுர் ரஹ்மான் பெற்­றுள்ளார்.

பங்­க­ளா­தேஷின் 20 வயது இளம் வீரர் முஸ்­தா­பிஸுர் ரஹ்மான், இந்­திய அணிக்கு எதி­ரான ஒருநாள் தொடரில் முதன் முறை­யாக சர்­வ­தேச போட்­டியில் கள­மி­றங்­கினார்.

முதல் ஆட்­டத்­தி­லேயே 5 விக்­கெட்­டு­களை வீழ்த்­திய முஸ்­தா­பிஸுர் ரஹ்மான்,  ஆட்­ட­நா­யகன் விரு­தையும் பெற்றார். 

இந்­தி­யாவை அடுத்து பங்­க­ளாதேஷ் சுற்­றுப்­ப­யணம் சென்ற தென்­னா­பி­ரிக்க அணியும், பங்­க­ளா­தே­ஷிற்கு எதி­ரான ஒருநாள் தொடரை 2-1 என்று இழந்­தது. 

அறுவை சிகிச்சையால் கெய்ல் சிறிது காலம் கிரிக்கெட்டுக்கு முழுக்கு

மேற்­கிந்­திய தீவு­களின் அதி­ரடி வீரர் கிறிஸ் கெய்ல் அறுவை சிகிச்சை செய்து கொள்ளப் போவதால் கிரிக்­கெட்­டுக்கு சிறிது காலம் முழுக்கு போட திட்­ட­மிட்­டுள்ளார்.

கிறிஸ் கெய்­லுக்கு நீண்ட கால­மாக முதுகு வலி காணப்­பட்­டதால் அதை அறுவை சிகிச்சை செய்து சரி செய்ய திட்­ட­மிட்­டுள்ளார்.

இதனால் அவர் 3 முதல் 4 மாதங்கள் கிரிக்­கெட்­டுக்கு முழுக்கு போட திட்­ட­மிட்­டுள்ளார்.

இது தொடர்­பாக அவர் கூறு­கையில், "நான் முதுகு வலியை அறுவை சிகிச்­சையால் சரி செய்து கொள்ள வேண்­டி­யுள்­ளது.

அதனால் டிசம்பர் மாதம் தான் கிரிக்­கெட்­டுக்கு மீண்டும் திரும்­புவேன்.

பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்த குஷலின் அதிரடி ஆட்டம்

இலங்கை- பாகிஸ்தான் அணி­க­ளுக்கு இடை­யி­லான 5ஆவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்­டியில் இலங்கை அணி 165 ஓட்­டங்­களால் வெற்­றி­பெற்­றது. ஹம்­பாந்­தோட்டை மைதா­னத்தில் நேற்று நடை­பெற்ற இந்­தப்­போட்­டியில் நாணய சுழற்­சியில் வெற்­றி­பெற்று இலங்கை அணி முதலில் துடுப்­பெ­டுத்­தா­டி­யது.

அதன்­படி இலங்கை அணி நிர்­ண­யிக்­கப்­பட்ட 50 ஓவர்­களில் 4 விக்­கெட்­டுக்­களை மாத்­திரம் இழந்து 368 ஓட்­டங்­களை விளா­சி­யது. இலங்கை அணியின் குஷல் பெரேரா, தில்ஷான் ஆகியோர் தொடக்க வீரர்­க­ளாக களம் இறங்­கி­னார்கள்.

இரு­வரும் தொடக்கம் முதலே சிறப்­பாக விளை­யாடி வந்­தனர்.

கோஹ்லி தலைமையில் இந்திய அணி அறிவிப்பு

இலங்­கையில் சுற்­றுப்­ப­யணம் மேற்­கொள்ள உள்ள விராட் கோஹ்லி தலை­மை­யி­லான இந்­திய டெஸ்ட் கிரிக்கெட் அணி அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. 

இந்­திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இலங்­கையில் சுற்­றுப்­ப­யணம் செய்து, 3 டெஸ்ட் போட்­டிகள் கொண்ட தொடரில் விளை­யாட உள்­ளது. முதல் டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 12ஆம் திகதியும் தொடங்குகிறது. 

இந்த டெஸ்ட் தொட­ருக்­கான வீரர்­களை சந்தீப் பட்டீல் தலை­மை­யி­லான இந்திய தேர்­வுக்­குழு நேற்று தேர்வு செய்து பட்­டி 
­யலை வெளி­யிட்­டுள்­ளது.  

Pages

Subscribe to Virakesari Sports RSS