வட்டு எறிதலில் ஒலிம்பிக் சம்பியனுக்கு அதிர்ச்சியளித்த கியூபாவின் வீராங்கனை

15-ஆவது உலக தட­கள சாம்­பி­யன்ஷிப் போட்டி சீனாவின் பீஜிங் நகரில் நடந்து வரு­கி­றது. போட்­டியின் 4-ஆவது நாளான நேற்று பெண்­க­ளுக்­கான வட்டு எறி­தலில் ஆச்­ச­ரி­யத்­திற்­கு­ரிய முடிவு கிடைத்­தது.

அஷ்வினை புகழும் முரளி

இலங்கை ஆடு­க­ளத்தில் அஷ்­வினின் பந்­து­வீச்சு மிகவும் அபா­ர­மாக இருக் ­கி­றது. அவ­ரது பந்துஅதி­க­மாக பௌன்ஸ் ஆகி­றது.

அதில் விக்­கெட்­டு­களை கைப்பற்­று­கிறார் என்றுமுத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.

அஷ்­வி­னுக்கு தற்­போது 28 வய­தா­கி­றது.

அவரால் இன்னும் 10 ஆண்­டுகள் விளை­யாட முடி யும். 100 டெஸ்­டுகள் வரை விளை­யா­டினால் அஷ்வின் 600 முதல் 700 விக்­கெட்­டு­களை கைப்­பற்­றுவார். இவ்­வாறு முத்தையா முரளி­தரன் கூறி­யுள்ளார்.

இங்கிலாந்து வீரர் ரூட்டுக்கு ஓய்வு

ஆஸ்­தி­ரே­லி­யா–­இங்­கி­லாந்து இடையே 5 ஒரு நாள் போட்டி நடக்­கி­றது.

ஒரு நாள் தொட­ருக்­கான இங்கி­லாந்து அணி அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

முன்­னணி பேட்ஸ்மேன் ஜோ ரூட்­டுக்கு ஓய்வு கொடுக்­கப்­பட்­டுள்­ளது.

மொயின் அலி, வோக்ஸ் ஆகியோர் அணிக்கு மீண்டும் அழைக்­கப்­பட்­டுள்­ளனர்.

 இங்­கி­லாந்து அணி விவரம்:–
மார்கன் (கேப்டன்), மொயின் அலி, பட்லர், ஹால்ஸ், ஜேம்ஸ் டெய்லர், சாம்­பில்லிங்ஸ், பிரைன் கெட், ஆதில் ரஷித், ஸ்டீவன் பின், வோக்ஸ், மார்க்வுட், டேவிட் வில்லி, பென்ஸ் டோக்ஸ், ஜேசன் ராய்.

 

கண்ணீரோடு விடைபெற்றார் சங்கா......!

இலங்கை மற்றும் இந்தி அணி­க­ளுக்­கி­டையில் இடம்­பெற்­று­வரும் இரண்­டா­வது டெஸ்ட் போட்­டி­யுடன் இலங்கை அணியின் நட்­சத்­திர வீரர் குமார் சங்­கக்­கார ஓய்வு பெறு­கின்றார். 

அணித்­த­லை­வ­ராக துடுப்­பாட்ட வீர­ராக விக்கெட் காப்­பா­ள­ராக சிரேஷ்ட வீர­ராக என சங்­காவின் பங்­க­ளிப்பு அவரின் 16 வருட கிரிக்கெட் வாழ்வில் அளப்­ப­ரி­யது. 

சர்­வ­தேச கிரிக்கெட் ரசி­கர்­களின் மனதை வென்ற வீரர்­களில் குமார் சங்­கக்­கா­ரவும் ஒருவர். எல்லா நாடு­க­ளிலும் இவருக்கு ரசிகர் பட்­டாளம் இருக்­கின்­றனர். 

187 ஓட்டங்கள் முன்னிலையில் இருக்கும் இந்தியா : களத்தில் நிற்கிறார் சங்கக்கார

காலி சர்­வ­தேச கிரிக்கெட் மைதா­னத்தில் நடந்து வரும் இலங்கை - இந்­திய அணி­க­ளுக்­கி­டை­யி­லான முதல் டெஸ்ட் போட்­டியில் இந்­திய அணி முதல் இன்­னிங்ஸில் 375 ஓட்­டங்­களைப் பெற்­றுக்­கொண்­டது.

இதில் தவான், கோஹ்­லியின் சதத்தால் இந்­திய அணி முதல் இன்னிங்ஸில் 192 ஓட்­டங்கள் முன்­னிலை பெற்­றுள்­ளது.

முதலில் விளை­யா­டிய இலங்கை அணி, அடுத்­த­டுத்து விக்­கெட்­டு­களை இழந்து 183 ஓட்­டங்­க­ளுக்கு ஆட்­ட­மி­ழந்­தது.

சுழல் பந்­து­வீச்­சாளர் அஸ்வின்,  6 விக்­கெட்­டு­களை வீழ்த்­தினார்.

அஸ்வினின் அபார பந்துவீச்சால் 183 ஓட்டங்களுடன் சுருண்ட இலங்கை அணி

இந்திய அணியுடனான டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில் இலங்கை அணி தனது முதல் இன் னிங்ஸில் 183 ஓட்டங்களுடன் சகல விக்கெட்களையும் இழந்தது. காலி சர்வதேச அரங்கில் நேற்று ஆரம்பமான இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடத்  தீர்மானித்தது. 

ஆனால், இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர்கள் திணறினர். 49.4 ஓவர்களில் இலங்கை அணியின் முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. 

உலகக் கிண்ண வலைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி : மீண்டும் தோல்வியைத் தழுவிய இலங்கை அணி

உலகக் கிண்ண வலைப்­பந்­தாட்டப் போட்­டி­களில் சிட்னி ஒலிம்பிக் பாரக் அல்ஃபோன்ஸ் எரினா அரங்கில் நேற்று நடை­பெற்ற  குழு எச் இற்­கான மற்­றொரு தகு­திகாண் போட்­டி­யிலும் இலங்கை தோல்வியடைந்­தது.

நேற்­றைய போட்­டியில் இலங்­கையை எதிர்த்­தா­டிய ஸ்கொட்­லாந்து 59 –  27 என்ற கோல்கள் அடிப் ­ப­டையில் வெற்­றி­யீட்­டி­யது.

உலகக் கிண்ண வலைப்­பந்­தாட்டப் போட்­டி­களில் நான்­கா­வது தட­வை­யாக ஒவ்­வொரு கால்­ப­கு­தி­யிலும் இரட்டை இலக்க எண்­ணிக்­கையைப் பெறத்­த­வ­றி­யது.

இலங்கை – இந்­திய அணிகள் மோதும் முத­லா­வது டெஸ்ட் போட்டி இன்று

காலை 10 மணிக்கு காலி சர்வதேச கிரிக் கெட் அரங்கில் தொடங்குகிறது.  3 டெஸ்ட் போட்­டிகள் கொண்ட தொடரில் விளை­யா­டு­வ­தற்­காக இந்­திய கிரிக்கெட் அணி இலங்­கைக்கு சுற்றுப் பயணம் மேற்­கொண்­டுள்­ளது.

இலங்கை கிரிக்கெட் சபைத் தலைவர் அணிக்கு எதி­ரான 3 நாள் பயிற்சி ஆட்­டத்தில் இந்­திய அணி விளை­யா­டி­யது. இதில் சிறப்­பான ஆட்­டத்தை இந்­திய அணி வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்­தது.

அதே­வேளை இலங்கை அணி சமீ­பத்தில் பாகிஸ்­தா­னிடம் தொடரை இழந்­தது. அந்த தோல்­வியின் கார­ண­மாக வெற்­றி­பெற்றே ஆக வேண்­டிய நிலையில் இலங்கை அணி உள்­ளது.

சங்காவை புகழ்ந்து தள்ளும் மஹேல...!

இலங்கை அணி சர்­வ­தேச போட்­டி­களில் விளை­யா­டிய நாளில் இருந்து இது­வ­ரையில் உள்ள துடுப்­பாட்ட வீரர்­களில் மிகவும் சிறந்த துடுப்­பாட்ட வீரர் குமார் சங்­கக்­கா­ரதான் என்று மஹேல புக­ழாரம் சூட்­டி­யுள்ளார்.

இலங்கை அணியில் விக் கெட் காப்­பா­ள­ராக கள­மி­றங்­ கிய சங்­கக்­கார, பின்னர் தலை­சி­றந்த துடுப்­பாட்ட வீர­ராக மாறினார். அவர் டெஸ்ட் போட்­டிகளில் 12 ஆயிரம் ஓட்­டங்­க­ளுக்கு மேலும், ஒருநாள் போட்­டிகளில் 14 ஆயிரம் ஓட் ­டங்­க­ளுக்கு மேலும் குவித்­துள்ளார்.

தற்­போது இந்­திய கிரிக் கெட் அணி இலங்­கையில் விளை­யாட தயா­ராகிக் கொண்­டி­ருக்­கி­றது.

இலங்கை அணிக்குள் புதிய நட்சத்திரம்...!

இந்­திய கிரிக்கெட் அணி இலங்­கையில் சுற்­றுப்­ப­யணம் மேற்­கொண்­டுள்­ளது.

விராட் கோஹ்லி தலை­மை­யி­லான இந்­திய அணி இலங்­கை­யுடன் மூன்று டெஸ்ட் போட்­டி­களில் விளை­யாட இருக்­கி­றது.

முதல் டெஸ்ட் போட்டி எதிர்­வரும் 12ஆம் திகதி காலியில் தொடங்க இருக்­கி­றது. இதற்­கான இலங்கை வீரர்கள் அறி­விக்­கப்­பட்­டுள்­ளனர்.

இந்த அணியில் புது­முக வீரர் விஷ்வா பெர்­னாண்டோ இடம் பெற்­றுள்ளார். 

தற்­போது டெஸ்ட் அணியில் சேர்க்­கப்­பட்­டுள்ள புது­முக வீரர் விஷ்வா பெர்­னாண்டோ இந்­தி­யா­விற்கு எதி­ரான பயிற்சி போட்­டியில் இலங்கை கிரிக்கெட் சபைத் தலைவர் லெவன் அணியில் இடம்­பெற்­றி­ருந்தார்.

Pages

Subscribe to Virakesari Sports RSS