மோடியிடம் பாராட்டு பெற்ற சங்கா...!

கிரிக்கெட் மைதா­னங்­களில் இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்­கக்­கா­ராவை தாம் இழப்­ப­தாக இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடி தெரி­வித்­துள்ளார்.

இந்­தி­யா­வுக்கு இலங்கை பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க சுற்­றுப்­ப­யணம் மேற்­கொண்­டுள்ளார்.

இந்­நி­லையில் செய்­தி­யாளர் சந்­திப்பின் போது பேசிய இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடி, சமீ­பத்தில் முடிந்த இந்­தியா- இலங்கை கிரிக்கெட் தொடர் இரு நாடு­க­ளுக்கும் இடையே அர­சியல் ரீதி­யான நட்­பு­றவை ஏற்­ப­டுத்­தி­ய­தாக தெரி­வித்­துள்ளார்.

இங்கிலாந்து அணியின் ஆலோசகரானார் மஹேல....!

இங்­கி­லாந்து கிரிக்கெட் அணியின் துடுப்­பாட்ட ஆலோ­ச­க­ராக இலங்கை அணியின் முன்னாள் நட்­சத்­திர வீரர் மஹேல ஜெய­வர்த்­தன செயற்­ப­ட­வுள்ளார்.

இங்­கி­லாந்து மற்றும் பாகிஸ்தான் அணி­க­ளுக்கு இடை­யி­லான டெஸ்ட் தொடர் எதிர்­வரும் ஒக்­டோபர் மாதம் ஐக்­கிய அரபு எமி­ரேட்சில் நடை­பெ­ற­வுள்­ளது.

இந்த தொட­ருக்­காக இங்­கி­லாந்து அணியின் துடுப்­பாட்ட ஆலோ­ச­க­ராக மஹேல செயல்­ப­ட­வி­ருப்­ப­தாக இங்­கி­லாந்து கிரிக்கெட் வாரியம் அறி­வித்­துள்­ளது.

அதே போல் காலிங்வூட் ஒருநாள் மற்றும் டி20 போட்­டி­க­ளுக்­கான ஆலோ­ச­க­ராக செயற்­ப­டுவார் எனவும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

ஓய்வு முடிவை பெடரர் அறிவிப்பாரா?

டென்னிஸ் உலகின் ஜாம்­பவான் ரோஜர் பெடரர். 17 கிராண்ட்­சிலாம் பட்டம் வென்று சரித்­திரம் படைத்து இருக்­கிறார்.

34 வய­தான பெடரர் கிராண்ட்­சிலாம் பட்டம் வென்று 3 ஆண்­டு­க­ளுக்கு மேல் ஆகி­றது. கடை­சி­யாக 2012–ம் ஆண்டு விம்­பிள்டன் பட்­டத்தை கைப்­பற்­றினார்.

அதன்­பி­றகு 3 தடவை இறு­திப்­போட்­டிக்கு நுழைந்தும் பட்டம் வெல்ல இய­ல­வில்லை. கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் விம்­பிள்­ட­னிலும், சமீ­பத்தில் அமெ­ரிக்க ஓப­னிலும் ஜோகோ­விச்­சிடம் வீழ்ந்தார்.

கிண்ணத்தை வென்றது அவுஸ்திரேலியா

இங்­கி­லாந்­துக்கு எதி­ரான ஒருநாள் போட்­டியில் 3-:2 என்ற கணக்கில் வெற்றி பெற்று அவுஸ்­தி­ரே­லியா கிண்­ணத்தை கைப்­பற்­றி­யது.
இங்­கி­லாந்து, அவுஸ்­தி­ரே­லியா அணிகள் மோதிய 5வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி மான்­செஸ்­டரில் நேற்று முன்­தினம்  நடை­பெற்­றது.

நாண­ய­சு­ழற்­சியில் வெற்றி பெற்ற இங்­கி­லாந்து அணியின் அணித்­த­லைவர் இயான் மார்கன் துடுப்­பெ­டுத்­தாட முடிவு செய்தார்.
இத­னை­ய­டுத்து கள­மி­றங்­கிய இங்­கி­லாந்து அணியின் தொடக்க வீரர்கள் ஜாசன் ராய்(4), அலெக்ஸ் ஹேல்ஸ்(4) மோச­மான தொடக்கம் தந்­தனர், ஜேம்ஸ் டெய்­லரும்(12) ஏமாற்­றினார்.

அவுஸ்­தி­ரே­லியா ஹெட்ரிக் வெற்றி பெறுமா?

இங்­கி­லாந்­து–­அவுஸ்­தி­ரே­லியா அணிகள் மோதும் 3–வது ஒரு நாள் போட்டி மான்­செஸ்­டரில்  இன்று நடக்­கி­றது.

இந்தப் போட்­டி­யிலும் வென்று அவுஸ்­தி­ரே­லியா ஹாட்ரிக் சாதனை புரி­யுமா என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

முதல் ஆட்­டத்தில் 59 ஓட்ட வித்­தி­யா­சத்­திலும், 2–வது போட்­டியில் 64 ஓட்ட வித்­தி­யா­சத்­திலும் அவுஸ்­தி­ரே­லியா வெற்றி பெற்று இருந்­தது.

மேலும் இன்றைய ஆட்­டத்தை வெல்­வதன் மூலம் அந்த அணி தொட­ரையும் கைப்­பற்ற இயலும்.

இங்­கி­லாந்து அணி தொடரை இழக்­காமல் இருக்க இன்றைய போட்­டியில் வெற்றி பெற வேண்­டிய நெருக்­க­டியில் உள்­ளது.

இங்கிலாந்து பிரீமியர் லீக் கால்பந்து போட்டி : 22ஆயிரம் கோடிக்கு வீரர்கள் இடமாற்றம்

கால்­பந்து போட்­டி­களில் பிர­சித்தி பெற்­றது கழக அணிகள் மோதும் ஆட்­ட­மாகும். இதில் இங்­கி­லாந்து பிரீ­மியர் ‘லீக்’ போட்­டியும் ஒன்­றாகும்.

1992ஆம் ஆண்டு முதல் இங்­கி­லாந்து பிரீ­மியர் ‘லீக்’ போட்டி நடை­பெற்று வரு­கி­றது. மான்­செஸ்டர் யுனைட்டட், செல்­சியா, மான் செஸ்டர் சிட்டி, ஆர்­சனல், லிவர்பூல், ஆஸ்டன், வில்லா உட்­பட 47 கழ­கங்கள் இதில் விளை­யாடி வரு­கின்­றன.

இந்த தொட­ருக்கு கழக வீரர்கள் இடம் மாற்­றத்­துக்­கான செலவில் புதிய சாதனை நிகழ்த்­தப்­பட்­டுள்­ளது.

இதற்­காக ரூ.22 ஆயிரம் கோடி செல­வ­ழிக்­கப்­பட்­டுள்­ளது. கடந்த தொடரில் ரூ.19 ஆயிரம் கோடி செல­வி­டப்­பட்­டது.

முடக்கப்பட்டது சங்காவின் டுவிட்டர்...!

இலங்கை கிரிக் கெட் அணியின் ஜாம்­ப­வா­னான குமார் சங்­கக்­கார இந்­தி­யா­விற்கு எதி­ராக நடை­பெற்ற 2- ஆவது டெஸ்ட் போட்­டி­யுடன், சர்­வ­தேச கிரிக்­கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.

தற்­போது இங்­கி­லாந்தின் உள்ளூர் அணி­யான சசெக்ஸ் அணிக்­காக சங்­கக்­கார விளை­யாடி வரு­கிறார். இவர் சமூக வலைத்­த­ளங்கள் மூலம் தனது ரசி­கர்­க­ளுக்கு தனது கருத்து மற்றும் செய்­தி­களை வெளி­யிட்டு வரு­கிறார். இவ­ரது டுவிட்­டரை சுமார் 5 லட்சம் ரசி­கர்கள் பின்­தொ­டர்­கி­றார்கள்.

இந்­நி­லையில் அவ­ ரது டுவிட்டர் பக்­கத்தை கைப்­பற்­றிய ஹேக்­கர்கள் அதில் ஆபாச படத்தை வெளி­யிட்­டுள்­ளனர்.

சர்மா, சந்திமலுக்கு தடை : அப­ராதம் விதித்­துள்­ளது ஐசிசி.

 இலங்கை இந்திய  டெஸ்ட் கிரிக்கட் போட்டிகளின் போது களத்தில் மோதல் போக்கைக் கடை­பி­டித்­த­தற்­காக இசாந்த் சர்மா மற்றும் இலங்கை வீரர் தினேஷ் சந்திமல் ஆகியோர் ஒரு போட்­டியில் விளை­யாட ஐசிசி தடை விதித்­துள்­ளது.

மேலும், மோச­மான நடத்­தைக்­காக இலங்கை வீரர்கள் லாஹிரு திரி­மானே, தம்­மிக பிரசாத் ஆகி­யோ­ருக்கு ஆட்டத் தொகையில் 50% அப­ராதம் விதித்­துள்­ளது ஐசிசி.

இதனால் தென் ஆப்­பி­ரிக்­கா­வுக்கு எதி­ராக மொஹா­லியில் நடை­பெறும் முதல் டெஸ்ட் போட்­டியில் இசாந்த் சர்மா விளை­யாட முடி­யாது. சந்திமல் மேற்­கிந்­திய தீவு­க­ளுக்கு எதி­ரான முதல் ஒருநாள் போட்­டியில் விளை­யாட முடி­யாது. 

கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி என்கிறார் கோலி...!

இலங்கை அணியை வீழ்த்திய பிறகு, இந்­திய டெஸ்ட் அணித்தலைவர் விராட் கோலி கூறு­கையில்,

இளம் வீரர்­களின் துணை­யுடன் இலங்கை மண்ணில் 22 ஆண்­டு­க­ளுக்கு பிறகு டெஸ்ட் தொடரை கைப்­பற்­றி­யது, மகத்­தான சாத­னை­யாகும்.

தொடரில் 0 -:1 என்ற கணக்கில் பின்­தங்கி இருந்து, மீண்டு வரு­வது எளி­தான காரியம் அல்ல. அது மட்­டு­மின்றி வெளி­நாட்டு மண்ணில் நாங்கள் 0 :-1 என்று இருந்து, தொடரை வென்­ற­தில்லை என்று சொன்­னார்கள்.

இப்­போது வர­லாறு படைத்து விட்டோம்.

மெத்தியூஸ், குசலின் போராட்டம் வீணானது : 22 வருடங்களுக்குப் பிறகு இலங்கை மண்ணில் தொடரை வென்றது இந்தியா

அஞ்­சலோ மெத்­தியூஸ் மற்றும் குசல் ஜனித் பெரேரா ஆகியோர் இறு­தி­வரைப் போரா­டியும் இலங்கை அணியை தோல்­வி­யி­லி­ருந்து மீட்க முடி­ய­வில்லை.

கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதா­னத்தில் நடை­பெற்­று­வந்த மூன்­றா­வதும் கடை­சி­யு­மான டெஸ்ட் போட்­டியில், இந்­திய அணி 117 ஓட்­டங்கள் வித்­தி­யா­சத்தில் வெற்றி பெற்­றது.

 இந்தத் தோல்­வி­யோடு இலங்கை அணி 2–1 என்ற அடிப்­ப­டையில் தொடரை இழந்தது.

22 ஆண்­டு­க­ளுக்கு பிறகு இலங்கை மண்ணில் இந்­திய அணி தொடரை கைப்­பற்­றியுள்ளது.
இந்த டெஸ்டில் முதல் இன்­னிங்ஸில் இந்­திய அணி 312 ஓட்­டங்­களைப் பெற்­றது.

Pages

Subscribe to Virakesari Sports RSS