Local

சேனாநாயக்கா கல்லூரியை வீழ்த்தி, கண்டி திருத்துவக் கல்லூரி வெற்றி

20 வயதின் கீழ் மைலோ கேடய றகர் போட்டி
இலங்கைப் பாட­சா­லைகள் றகர் சங்­கமும் நெஸ்லே லங்கா நிறு­வ­னமும் இணைந்து ஒழுங்கு செய்த 20 வய­தின்­கீ­ழான மைலோ கேடய றகர் போட்டி ஒன்றில் கண்டி திருத்­துவக் கல்­லூரி 41:14 என்ற புள்ளி அடிப்­ப­டையில் கொழும்பு டி.எஸ்.சேனா­நா­யக்கா கல்­லூ­ரியை வெற்றி பெற்றது.

இந்த போட்டி நேற்­று­முன்­தினம் இடம்­பெற்­றது. 

முதலாம் பாதி முடிவில் திருத்­துவக் கல்­லூரி 19:7 என்ற அடிப்­ப­டையில் முன்­னிலை வகித்­தது. போட்டி முடிவில் 4 கோல், 2 ட்ரை,1 பெனல்டி மூலம் 41 புள்­ளி­களைப் பெற்­றது.

முப்பாய்ச்சலில் தனது சொந்த சாதனையை முறியடித்த விதூஷா லக்ஷானி

திய­கம மஹிந்த ராஜபக் ஷ விளை­யாட்­ட­ரங்கில் நேற்று ஆரம்­ப­மான 85ஆவது சேர் ஜொன் டார்பட் சிரேஷ்ட பாடசா­லைகள் மெய்­வல்­லுநர் போட்­டியில் நீர்­கொ­ழும்பு நியஸ்டெட் கல்­லூ­ரியைச் சேர்ந்த விதூஷா லக் ஷானி 20 வய­துக்­குட்­பட்ட பெண்­க­ளுக்­கான முப்­பாய்ச்­சலில் தனது சொந்த சாத­னையை முறி­ய­டித்தார்.

கடந்த வருடம் நடை­பெற்ற 84ஆவது அத்­தி­யா­யத்தில் 12.50 மீற்றர் தூரம் பாய்ந்து நிலை­நாட்­டிய தனது சொந்த சாத­னையை லக் ஷானி இம் முறை 13.05 மீற்றர் தூரம் பாய்ந்து முறி­ய­டித்தார்.

சாதனை புரிந்த வீர வீராங்கனைகள் கௌரவித்தது அமைச்சு : ரூ. 42 இலட்சம் பெறுமதியான பணப்பரிசுகள் வழங்கப்பட்டன

விளை­யாட்டை எடுத்­துக்­கொண்டால் பெரு­மைப்­ப­டக்­கூ­டிய சிறந்த­தொரு வர­லாற்றை நாம் கொண்­டுள்ளோம்.

இதை அப்­ப­டியே முன்­ந­கர்த்தி எதிர்­வரும் காலங்­களில் சர்வ­தேச அளவில் எமது திற­மை­களை நிரூ­பிக்க வேண்டும்

.அதற்கு தேவை­யான அனைத்­தையும் விளை­யாட்­டுத்­துறை அமைச்சு செய்­து­கொ­டுக்கும் என்று விளையாட்­டுத்­துறை மற்றும் சுற்­று­லாத்­துறை அமைச்சர் நவீன் திஸா­நா­யக்க தெரி­வித்தார்.

எக்ஸ்­பிரஸ் பிரி­மியர் லீக் கிரிக்­கெட் : சம்­பி­யன்­ பட்­டத்தை சுவீகரித்த 'விடிவெள்ளி ஸ்டார்' அணி

எக்ஸ்­பிரஸ் பிரி­மியர் லீக் கிரிக்­கெட் – 2015 ­போட்­டியின் சம்­பி­யன்­ பட்­டத்தை 'விடிவெள்ளி ஸ்டார்' அணி சுவீகரித்துக்கொண்டது. 

வீர­கே­சரி ஊழியர் நலன்­புரிச் சங்­கத்தின் ஏற்­பாட்டில் 8 அணிகள் மோதிய இந்த கிரிக்­கெட் ­போட்­டி நேற்­றைய தினம் கொழும்பு 07 ரோயல் கல்­லூரி மைதா­னத்தில் இடம்­பெற்­றது.

இத்­தொ­டரின் முத­லா­வது போட்­டியில் மித்­திரன் இலவன் அணியை எதிர்­கொண்ட விடி வெள்ளி ஸ்டார் அணி இல­கு­ வெற்­றியை பெற்­றுக்­கொண்­டது. 

இந்­நி­லையில் இறு­திப்­போட்­டிக்கு முன்­னே­றிய எச்.எம்.கே.எஸ். பண்­டார தலை­மை­யி­லான விடிவெள்ளி அணி சன்­பி­ளவர் அணியை எதிர்­கொண்­டது.

ஒலிம்பிக்தான் எனது இலக்கு: தங்க மங்கை யமானி

ஒலிம்பிக் போட்­டிக்கு செல்­வ­துதான் தனது இலக்­கென்றும் அதில் தங்­கப்­ப­தக்கம் வெல்­வதை இலட்­சி­ய­மாகக் கொண்டு செயற்­ப­டு­வ­தா­கவும் தெரி­வித்தார் இலங்­கைக்கு தங்­கப்­ப­தக்கம் வென்­று­தந்த வீராங்­கனை யமானி.

கத்தார் தோஹா விளை­யாட்­ட­ரங்கில் நடை­பெற்ற முத­லா­வது ஆசிய கனிஷ்ட மெய்­வல்­லுநர் (18 வய­துக்­குட்­பட்­ட­வர்­க­ளுக்­கா­னது) போட்­டி­களில் இலங்கை கனிஷ்ட மெய்­வல்­லு­நர்கள் ஒரு தங்கம், 3 வெள்ளிப் பதக்­கங்­களை வென்­றனர்.

கிழக்கு மாகாணமட்ட கிரிக்கெட் சம்பியனான சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரி அணியினர் வெற்றி ஊர்வலம்

கிழக்கு மாகாண கல்­வித்­தி­ணைக்­களம் நடத்­திய மாகா­ண­மட்ட விளை­யாட்­டுப்­போட்­டியின் மென்­பந்து கிரிக்கட் சுற்­றுப்­போட்­டியில் முத­லிடம் பெற்று மாகாண சம்­பி­ய­னான சம்­மாந்­துறை முஸ்லிம் மத்­திய கல்­லூரி கிரிக்கட் அணி­யினர் நேற்று வியா­ழக்­கி­ழமை பாரிய ஊர்­வ­ல­மொன்றை சம்­மாந்­து­றையில் நடத்­தினர்.

நேற்­று­முன்­தினம் கிண்­ணியா அல்­இர்பான் மகா வித்­தி­யா­லய மைதா­னத்தில் நடை­பெற்ற மாகா­ண­மட்ட கிரிக்கட் சுற்­றுப்­போட்­டியின் இறு­திப்­போட்­டியில் கல்­முனை சாஹிரா தேசிய கல்­லூ­ரி­யுடன் மோதி சம்­மாந்­துறை முஸ்லிம் மத்­திய கல்­லூரி கிரிக்கட் அணி வெற்­றி­யீட்­டி­யுள்­ளது.

மயாஸ் விளையாட்டுக் கழகம் சம்பியன்

அக்­க­ரைப்­பற்று பிர­தேச செய­லக விளை­யாட்டுப் போட்­டியின் ஓர் அங்­க­மான கால்­பந்­தாட்ட சுற்றுப் போட்­டியில் மயாஸ் விளை­யாட்டுக் கழகம் சம்­பி­ய­னாகத் தெரிவு செய்­யப்­பட்­டுள்­ளது.

மயாஸ் விளை­யாட்டுக் கழ­கத்­திற்கும், ஹல்லாஜ் விளை­யாட்டுக் கழ­கத்­திற்கும் இடை­யி­லான இறு­திப்­போட்டி ஞாயி­றன்று  (22) பள்­ளிக்­கு­டி­யி­ருப்பு  அதா­உல்லா மைதா­னத்தில் நடை­பெற்­றது.

இதில் 1:0 என்ற கோல்கள் வித்­தி­யா­சத்தில் மயாஸ் விளை­யாட்டுக் கழகம் சம்­பி­ய­னாகத் தெரிவு செய்­யப்­பட்­டுள்­ளது.

தேசிய விளையாட்டு கவுன்சிலுக்கு புதிய உறுப்பினர்களை நியமித்தார் அமைச்சர்...

விளை­யாட்­டுத்­துறை அபி­வி­ருத்தி தொடர்­பான ஆலோ­ச­னை­களை விளை­யாட்­டுத்­துறை அமைச்­ச­ருக்கு வழங்கும் பொருட்டு 13 பேர் கொண்ட தேசிய விளை­யாட்­டுத்­துறை பேரவை குழுவை சுற்­று­லாத்­துறை மற்றும் விளை­யாட்­டுத்­துறை அமைச்சர் நவீன் திசா­நா­யக்க நிய­மித்­துள்ளார்.

அடுத்த மூன்று வரு­டங்­க­ளுக்கு நிய­மிக்­கப்­பட்­டுள்ள இக் குழு­வுக்கு முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் நிமல் லெவ்கே தலை­வ­ரா­கவும் முன்னாள் விளை­யாட்­டுத்­துறை அதி­காரி ஷான்த வீர­சிங்க செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நீச்சல் தடாகம் திறப்பு...

பதுளையில்  நீச்சல் தடாகமொன்று அண்மையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஊவா மாகாண விளையாட்டுத்துறை அமைச்சர் வடிவேல் சுரேஷ் இந்நிகழ்வில்  பிரதம விருந்தினரான கலந்து கொண்டார்.

ஊவா மாகாணசபை உறுப்பினர் ஆர்.எம். ரட்ணாயக்க பதுளை மேயர் நிசங்க குணசேகர,  மாகாண கல்வி அமைச்சின் செயயலாளர் சத்தியா அம்பன்வெல மாகாண கல்விப்பணிப்பாளர் பியதாசரட்னாயக்க ஆகியோரும் பங்கேற்றனர்.

நியூ ஸ்டார்ஸ் கழகத்தை கல்பிட்டி பேர்ள்ஸ் கழகம் வென்றது...

புத்­தளம் நியூ ஸ்டார்ஸ் கழ­கத்­துக்கும் கல்­பிட்டி பேர்ள்ஸ் கழ­கத்­துக்­கு­மி­டையில் நடை­பெற்ற கால்­பந்­தாட்ட போட்­டியில் தண்ட உதையின் மூல­மாக கல்­பிட்டி பேர்ள்ஸ் கழகம் வெற்றி பெற்­றது.

இலங்கை கால்­பந்­தாட்ட சம்­மே­ளனம் நடத்தி வரும் எவ்.ஏ. கிண்­ணத்­துக்­கான இந்த கால்­பந்­தாட்ட போட்டி புத்­தளம் ஸாஹிரா தேசிய  பாட­சாலை மைதா­னத்தில் இடம்­பெற்­றது.

போட்டி நிறை­வு­பெ­றும்­வேளை இரு அணி­களும் தலா ஒரு  கோலினை பெற்று சம­நிலை வகித்­ததால் வெற்­றியை தீர்­மா­னிப்­ப­தற்­காக நடை­பெற்ற தண்ட உதையில் 4:2 கோல்­க­ளினால்  கல்­பிட்டி பேர்ள்ஸ் அணி வெற்றி பெற்­றது.

Pages

Subscribe to RSS - Local