Football

இலங்கை கால்பந்தாட்ட அபிவிருத்திக்கு உதவுவதாக ஃபீஃபா தலைவர் செப் பிளட்டர் மீண்டும் உறுதி

இலங்கை கால்­பந்­தாட்ட அபி­வி­ருத்திப் பணி­க­ளுக்கு தொடர்ந்து உத­வு­வ­தாக சர்­வ­தேச கால்­பந்­தாட்ட சங்­கங்­களின் சம்­மே­ளனத் (ஃபீஃபா) செப் ப்ளட்டர் உறுதி வழங்­கி­யுள்ளார்.

இலங்கை கால்­பந்­தாட்ட சம்­மே­ளனத் தலைவர் அநுர டி சில்வா, முன்னாள் தலைவர் ரஞ்சித் ரொட்­றிகோ ஆகியோர் சூரிச் நக­ரி­லுள்ள சர்­வ­தேச கால்­பந்­தாட்ட சங்­கங்­களின் சம்­மே­ளனத் தலை­மை­ய­கத்தில் வைத்து செப் பிளட்டர் சந்­தித்­த­போது அவர் இந்த உறு­தியை வழங்­கி­யுள்ளார்.

இங்கிலாந்து பிரீமியர் லீக் கால்பந்து போட்டி : 22ஆயிரம் கோடிக்கு வீரர்கள் இடமாற்றம்

கால்­பந்து போட்­டி­களில் பிர­சித்தி பெற்­றது கழக அணிகள் மோதும் ஆட்­ட­மாகும். இதில் இங்­கி­லாந்து பிரீ­மியர் ‘லீக்’ போட்­டியும் ஒன்­றாகும்.

1992ஆம் ஆண்டு முதல் இங்­கி­லாந்து பிரீ­மியர் ‘லீக்’ போட்டி நடை­பெற்று வரு­கி­றது. மான்­செஸ்டர் யுனைட்டட், செல்­சியா, மான் செஸ்டர் சிட்டி, ஆர்­சனல், லிவர்பூல், ஆஸ்டன், வில்லா உட்­பட 47 கழ­கங்கள் இதில் விளை­யாடி வரு­கின்­றன.

இந்த தொட­ருக்கு கழக வீரர்கள் இடம் மாற்­றத்­துக்­கான செலவில் புதிய சாதனை நிகழ்த்­தப்­பட்­டுள்­ளது.

இதற்­காக ரூ.22 ஆயிரம் கோடி செல­வ­ழிக்­கப்­பட்­டுள்­ளது. கடந்த தொடரில் ரூ.19 ஆயிரம் கோடி செல­வி­டப்­பட்­டது.

கவா­னியை கையால் தள்­ளினார் ஜாரா : போட்டித் தடை விதித்தது ஒழுங்கு நட­வ­டிக்கைக் குழு

தென்­ன­மெ­ரிக்­காவின் பிர­பல கால்­பந்து போட்­டி­யான கோபா அமெ­ரிக்கா கால்­பந்து போட்டி சிலியில் நடை­பெற்று வரு­கி­றது. இதில் கடந்த வாரம் நடை­பெற்ற காலி­றுதி ஆட்­டத்தில் சிலியும், உரு­கு­வேயும் மோதின. சிலி 1:0 என்ற கோல் கணக்கில் வென்ற இந்த ஆட்­டத்தில் கைக­லப்பும் ஏற்­பட்­டது.

சிலி பின்­கள வீரர் கொன்­ஸாலோ ஜாராவின் முகத்தில் கையால் இடித்­த­தற்­காக உரு­குவே ஸ்டிரைக்கர் எடின்சன் கவா­னிக்கு 2- வது மஞ்சல் அட்டை காண்­பிக்­கப்­பட்டு போட்டி யிலி­ருந்து வெளி­யேற்­றப்­பட்டார்.

அப்­போது ஜாரா தனது பின்­பக்­கத்தில் கையை வைத்து தள்­ளினார் என கவானி குற்­றம்­சாட்­டி­யி­ருந்தார். 

சண்டையினூடே சிலி வெற்றி ; நடப்பு சம்பியன் நடையை கட்டியது...!

கோபா அமெ­ரிக்கா கால்­பந்து தொடரில் நடந்த காலி­றுதி ஆட்­டத்தில் சிலி அணி 1–-0 என்ற கோல் கணக்கில் நடப்பு சம்­பியன் உரு­குவே அணியை வீழ்த்­தி­யது.

சான்­டி­யா­கோவில் நடந்த இந்த ஆட்­டத்தில் 62ஆவது நிமி­டத்தில் சிலி வீரர் ஜாராவை முகத்தில் தாக்­கிய உரு­குவே அணியின் முன்­னணி வீரர் எடிசன் கவானி மஞ்சள் அட்டை பெற்றார்.

ஜாரா, எடிசன் கவா­னியின் பின்­பு­றத்தை தட்டி அநா­கரிக­மாக நடந்­த­தை­ய­டுத்து எடிசன் கவாசி அவரை அடித்­த­தாக கூறப்­ப­டு­கி­றது.

தொடர்ந்து லைன்ஸ்­மே­னிடம் சென்று எடிசன் கவானி தக­ராறில் ஈடு­பட்டார்.

மகளிர் உலக கிண்ண கால்பந்து போட்டி : நெதர்லாந்தை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தது ஜப்பான்

ஏழா­வது மகளிர் உலக கிண்ண கால்­பந்து போட்டி கன­டாவில் நடை­பெற்று வரு­கி­றது.

இந்­திய நேரப்­படி நேற்று காலை கடைசி 2 ஆவது சுற்று ஆட்டம் நடந்­தது. இதில் நடப்பு சாம்­பியன் ஜப்பான், நெதர்­லாந்து அணிகள் மோதின.

இதில் நெதர்லாந்தை வீழ்த்தி ஜப்பான் 2 :1 என்ற கோல் கணக்கில் வென்று கால்­இ­று­திக்கு தகுதி பெற்­றது. 

2 ஆவது சுற்று முடிவில் ஜெர்­மனி, சீனா, ஆஸ்­தி­ரே­லியா, பிரான்ஸ், கனடா, இங்­கி­லாந்து, அமெ­ரிக்கா, ஜப்பான் ஆகிய அணிகள் கால்­இ­று­திக்கு தகுதி பெற்­றன.

பிரேசில் கால்பந்து ஜாம்பவான் ஜிடோ மரணம்

1958 மற்றும் 1962-ஆம் ஆண்­டு­களில் உலக கிண்­ணத்தை வென்ற பிரேசில் கால்­பந்து அணியில் இடம் பிடித்து இருந்த நடு­கள வீரர் ஜிடோ (வயது 82) கடந்த ஆண்டு பக்க வாத நோயால் பாதிக்­கப்­பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் அவர் நேற்­று­முன்­தினம் மரணம் அடைந்­த­தாக அவுஸ்­தி­ரே­லிய கால்­பந்து கூட்­ட­மைப்பு அறி­வித்­துள்­ளது. 

பிரேசில் கால்­பந்து அணியின் முன்னாள் கதா­நா­யகன் பீலே­வுடன் இணைந்து ஆடிய ஜிடோ 1962-ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் இறு­திப்­போட்­டியில் கோல் அடித்­தவர் ஆவார்.

கோபா அமெரிக்கா கால்பந்தாட்ட தொடர்: போராடி வென்றது பிரேசில்...

சிலியில் நடை­பெற்று வரும் கோபா அமெ­ரிக்கா கால்­பந்து போட்­டியில் பெரு அணியை கடும் போராட்­டத்­துக்குப் பிறகு 2-–1 என்ற கோல் கணக்கில் வென்­றது பிரேசில் அணி.

சிலியில் நடை­பெறும் கோபா அமெ­ரிக்கா கால்­பந்து போட்டித் தொடரில் 'சி'-பி­ரிவு ஆட்­டத்தில் பிரேசில் - பெரு அணி­க­ளுக்கு இடை­யி­லான போட்டி மிகவும் விறு­வி­றுப்­பாக அமைந்­தது. தொடக்கம் முதலே இரு அணி வீரர்­களும் சிறப்­பாக விளை­யா­டினர்.

அமெரிக்க கால்பந்தாட்ட தொடர்: ஆர்ஜன்டீனாவுக்கு பரகுவே அதிர்ச்சி கொடுத்தது

சிலியில் நடை­பெறும் கோபா அமெ­ரிக்கா கால்­பந்து பி-பி­ரிவு ஆட்­டத்தில் 2 கோல்கள் பின் தங்­கி­யி­ருந்த பர­குவே, இடை­வே­ளைக்குப் பிறகு 2 கோல்­களைத் திருப்பி ஆர்­ஜன்­டீனா அணிக்கு எதி­ரான ஆட்­டத்தை அபா­ர­மாக சம­நி­லையில் முடித்து அவ்­வ­ணிக்கு அதிர்­ச்சி­கொ­டுத்­தது.

முதல் பாதி­யி­லேயே ஆர்­ஜன்­டீ­னாவின் பிர­பல வீரர்­க­ளான செர்­ஜியோ அக்­யூரோ மற்றும் லயோனல் மெஸ்ஸி ஆகியோர் 2 கோல்­களை அடித்து விட்­டனர்.

ஆனால் இடை­வே­ளைக்கு பிறகு ஆச்­ச­ரி­ய­க­ர­மான ஆட்­டத்தை வெளிப்­ப­டுத்­திய பரா­குவே அணியில் நெல்சன் ஹேடோ வால்டேஸ், லூகாஸ் பேரியஸ் ஆகியோர் 2 கோல்­களை அடித்­தனர்.

15ஆவது கோல் : வரலாறு படைத்தார் மார்ட்டா...

பெண்­க­ளுக்­கான உலகக் கிண்ணக் கால்­பந்து போட்டி கன­டாவில் நடந்து வரு­கி­றது.

இதில் நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் பிரேசில் அணி 2–0 என்ற கோல் கணக்கில் தென்­கொ­ரி­யாவை வீழ்த்தி­யது.

இதில் 2ஆ-வது கோலை பிரேசில் முன்­னணி வீராங்கனை 29 வயதான மார்ட் டா ‘பெனால்டி’  வாய்ப்பில் அடித்தார். 

உலக கிண்­ணத்தில் இது மார்ட்­டாவின் 15ஆவது கோலாகும்.

இதன் மூலம் பெண்கள் உலக கிண்ண வர­லாற்றில் அதிக கோல்கள் அடித்­த­வ­ரான ஜெர்­ம­னியின் பிர்ஜிட் பிரின்சின் சாத­னையை (14 கோல்) தகர்த்தார். 

தலைவர் பதவியிலிருந்து விலகுகிறேன் : செப் பிளாட்டர் அறிவிப்பு

சர்­வ­தேச கால்­பந்து சம்­மே­ள­னத்தின் தலைவர் பத­வி­யி­லி­ருந்து தான் வில­கு­வ­தாக செப் பிளாட்டர் அறி­வித்­துள்ளார்.

ஸூரிச்சில் அவ­ச­ர­மாகக் கூட்­டப்­பட்ட செய்­தி­யா­ளர்கள் கூட்டம் ஒன்­றி­லேயே அவர் இதைத் தெரி­வித்தார்.

அடுத்த தலை­வரைத் தேர்­ந்தெ­டுக்க அசா­தா­ர­ண­மான பொதுக்­கூட்டம் அழைக்­கப்­பட்டு அதில் முடி­வெ­டுக்­கப்­படும் எனவும் அவர் அறி­வித்தார்.

Pages

Subscribe to RSS - Football