மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை கிரிக்கெட் பயிற்சிப் போட்டி சமநிலையில்

மேற்­கிந்­தியத் தீவுகள் கிரிக்கெட் அணி இலங்­கையில் சுற்­றுப்­ப­யணம் மேற்­கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் இரண்டு டி20 போட்­டி­களில் விளை­யா­டு­கி­றது. முதல் டெஸ்ட் தொடர் எதிர்­வரும் 14ம் திகதி தொடங்­கு­கி­றது.

இதற்கு முன்­ன­தாக 3 நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்­டத்தில் இலங்கை கிரிக்கெட் வாரி­யத்­த­லைவர் லெவன் -மேற்­கிந்­திய தீவுகள் அணிகள் விளை­யா­டி­யது.

இதில் முதலில் துடுப்­பெ­டுத்­தா­டிய மேற்­கிந்­திய தீவுகள் அணி முதல் இன்­னிங்சில் 209 ஓட்­டங்­களில் சுருண்­டது. இலங்கை அணி சார்பில் ரந்தீவ் ஐந்து விக்­கெட்­டுக்கள் வீழ்த்­தினார்.

பின்னர் இலங்கை கிரிக்கெட் வாரிய தலைவர் லெவன் அணி விளை­யா­டி­யது. முதல் இன்­னிங்சின் முதல் பந்தில் மெண்­டீசும், 2வது பந்தில் திரி­மான்­னேவும் டக்- அவுட் ஆகி அதிர்ச்சி அளித்­தனர்.

அதன்பின் வந்த ஜெய­சுந்­தேரா, பனுகா, சிறி­வர்த்­தனா ஆகியோர் நிதா­ன­மாக விளை­யாடி சதம் அடித்­தனர். ஜெய­சுந்­தேரா 142 ஓட்­டங்­களும், பனுகா 101 ஓட்­டங்­களும், சிறி­வர்த்­தனா 105 ஓட்­டங்­களும் எடுத்­தனர்.

இதனால் இலங்கை கிரிக்கெட் வாரிய லெவன் அணி 7 விக்கெட் இழப்­பிற்கு 455 ஓட்­டங்கள் குவித்­தது. இந்­நி­லையில் 3 நாட்கள் கொண்ட ஆட்டம் முடிவடைந்ததால் இந்த போட்டி சமநிலையில் முடிந்தது.