டோனிக்கு ஆத­ரவு : முன்னாள் இந்­திய ஜாம்­பவான் கவாஸ்கர்

இந்­திய அணித்­த­லைவர் டோனிக்கு முன்னாள் இந்­திய ஜாம்­பவான் கவாஸ்கர் ஆத­ரவு தெரி­வித்­துள்ளார்.

தென் ஆ­பி­ரிக்­கா­வுக்கு எதி­ரான முதல் ஒருநாள் போட்­டியில் இந்­திய அணி தோற்­றதால் அணித்­த­லைவர் டோனி மீது விமர்ச­னங்கள் எழுந்­தன.

இந்­திய அணியில் டோனியின் இடம் பற்­றியும், அவ­ரது தலைவர் பதவி பற்­றியும் பரி­சீ­லிக்க வேண்டும் என்றும் பலரும் குற்றம் சாட்­டினர்.

இந்­நி­லையில் டோனி இந்­திய அணியில் இன்னும் 3 அல்­லது 5 ஆண்­டுகள் வரை விளை­யா­டுவார் என்று கவாஸ்கர் கூறி­யுள்ளார்.
இது பற்றி அவர் கூறு­கையில், "தென் ஆ­பி­ரிக்­கா­வுக்கு எதி­ரான முதல் ஒருநாள் போட்­டியில் தவான், ரெய்னா, கோஹ்லி, பின்­னியின் துடுப்­பாட்டம் பற்றி யாரும் கேள்வி எழுப்­ப­வில்லை.

அதே சமயம் பந்­து­வீச்­சா­ளர்­களின் மோச­மான செயற்­பாடு பற்­றியும் அனை­வரும் மறந்து விட்­டனர். ஆனால் டோனியை மட்டும் குறை கூறு­கின்­றனர்.

அவர் தான் இதற்கு பலி­க்கடா. அவர் இந்­திய அணிக்­காக இன்னும் 3 அல்­லது 5 ஆண்­டுகள் வரை ஆடுவார். நான் 37வது வயதில் தான் ஓய்வு பெற்றேன்.

சச்சின் தனது 40வது வயதில் தான் ஓய்வு பெற்றார். இதே போல் டோனிக்கும் இன்னும் அதிக போட்டிகள் உள்ளன" என்று தெரிவித்துள்ளார்.