கடைசி ஒருநாள் போட்டியில் அசத்தல் : தொடரை வென்றது பாகிஸ்தான் அணி

5 விக்கெட் வீழ்த்­திய பிலால் ஆசிப்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி சிம்­பாப்­வேயில் சுற்­றுப்­ப­யணம் செய்து விளை­யா­டியது.

இரு அணிகள் இடை­யே­யான 3 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் முதல் ஆட்­டத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்­றது.

2வது ஆட்­டத்தின் போது மழை குறுக்­கிட்­டதால் டக்வொர்த் லீவிஸ் விதிப்­படி சிம்­பாப்வே வெற்றி பெற்­ற­தாக அறி­விக்­கப்­பட்­டது.

இந்­நி­லையில் கடைசி போட்டி நேற்று முன்தினம் ஹரா­ரேயில் நடை­பெற்­றது. முதலில் பேட் செய்த சிம்­பாப்வே அணி 38.5 ஓவரில் 161 ஒட்டங்களுக்கு சுருண்­டது.

அதி­க­பட்­ச­மாக முட்­டும்­பாமி 67, ஷிபாபா 48 ஒட்டங்கள் எடுத்­தனர். ஷாரி 4, வில்­லியம்ஸ் 5, சிக்­கும்­புரா 0, ஷிகந்தர் ராஸா 2, முட்­டோம்­போட்ஸி 4, வாலர் 8, பயன்­யங்­காரா 0, நயூம்பு 4 ஒட்டங்களில் ஆட்டமிழந்தனர்.

பாக். தரப்பில் பிலால் ஆசிப் 5, இமாத் வாசிம் 3, முக­மது இர்பான், சோயிப் மாலிக் தலா 1 விக்கெட்களைக் கைப்­பற்­றினர். எளி­தான இலக்­குடன் ஆடிய பாக்.

அணி 34 ஓவரில் 3 விக்கெட் இழப்­பிற்கு 162 ஒட்டங்கள் எடுத்து வெற்றி பெற்­றது. ஷேசாத் 32, பிலால் ஆசிப் 38, முக­மது ஹபீஸ் 13 ஒட்டங்களில் ஆட்­ட­மி­ழந்­தனர்.

ஆசாத் ஷபீக் 38, சோயிப் மாலிக் 34 ஒட்டங்களுடன் ஆட்­ட­மி­ழக்­காமல் இருந்­தனர்

இந்த வெற்­றியின் மூலம் பாக். அணி ஒருநாள் போட்டி தொடரை 2- :1 என்ற கணக்கில் கைப்பற்றியது. ஆட்ட நாயகன் விருது பிலால் ஆசிப்பிற்கு வழங் கப்பட்டது.