இலங்கை கால்பந்தாட்ட அபிவிருத்திக்கு உதவுவதாக ஃபீஃபா தலைவர் செப் பிளட்டர் மீண்டும் உறுதி

இலங்கை கால்­பந்­தாட்ட அபி­வி­ருத்திப் பணி­க­ளுக்கு தொடர்ந்து உத­வு­வ­தாக சர்­வ­தேச கால்­பந்­தாட்ட சங்­கங்­களின் சம்­மே­ளனத் (ஃபீஃபா) செப் ப்ளட்டர் உறுதி வழங்­கி­யுள்ளார்.

இலங்கை கால்­பந்­தாட்ட சம்­மே­ளனத் தலைவர் அநுர டி சில்வா, முன்னாள் தலைவர் ரஞ்சித் ரொட்­றிகோ ஆகியோர் சூரிச் நக­ரி­லுள்ள சர்­வ­தேச கால்­பந்­தாட்ட சங்­கங்­களின் சம்­மே­ளனத் தலை­மை­ய­கத்தில் வைத்து செப் பிளட்டர் சந்­தித்­த­போது அவர் இந்த உறு­தியை வழங்­கி­யுள்ளார்.

இலங்­கையில் தற்­போ­தைய கால்­பந்­தாட்ட அபி­வி­ருத் திப் பணிகள் மற்றும் கால்­பந்­தாட்­டத்தை முன்­னேற்­று­வ­தற்கு சம்­மே­ளனம் வகுத்­துள்ள திட்­டங்கள் ஆகி­ய­வற்றை செப் பிளட்­ட­ரிடம் அநுர டி சில்வா விரி­வாக எடுத்­து­ரைத்தார்.

அத்­துடன் இலங்கை கால்­பந்­தாட்ட சம்­மே­ள­னத்தின் மனித வளங் கள், தொழில்­நுட்ப அபி­வி­ருத்தி மற்றும் நிதி முகா­மைத்­துவம் என்­பன தொடர்­பா­க வும் சர்­வ­தேச கால்­பந்­தாட்ட சங்­கங்­களின் சம் ­மே­ளனப் பிர­தி­நி­தி­க­ளி டம் அனுர டி சில்வா விளக்கிக் கூறினார்.

பெத்­த­கா­னவில் செயற்கை ஆடு­கள விரிப்பு பதிப்­ப­தற்­கான திட்டம் தொடர்­பா­கவும், தங்­கொல்லை, களனி விளை­யாட்டு மைதானத் தொகு­தி­களின் நிலை என்பன குறித்தும் சர்வதேச அதிகாரிகளிடம் அநுர டி தலைமையிலான இலங்கை குழுவினர் தெளிவுபடுத்தினர்.