அமெரிக்காவில் இணையும் சச்சின், சங்கக்கார...!

அமெ­ரிக்­காவில் நடக்க­வுள்ள கண்­காட்சி டி20 கிரிக்கெட் போட்­டியில் சச்சின், வார்னே, சங்­கக்­கார உள்­ளிட்ட முன்னாள் வீரர்கள் விளை­யாட உள்­ளனர்.

அமெ­ரிக்­காவில் கிரிக்­கெட்டை பிர­ப­லப்­ப­டுத்தும் முயற்­சிகள் நடந்து வரு­கின்­றன. இதன் ஒரு பகு­தி­யாக இந்­திய ஜாம்­பவான் சச்சின், அவுஸ்­தி­ரே­லிய முன்னாள் சுழல் ஜாம்­பவான் வார்னே உள்­ளிட்டோர் பங்­கேற்கும் போட்­டிகள் நடக்­கி­றது.

இந்தப் போட்­டியில் கங்­குலி, லட்­சுமண், வாசிம் அக்ரம், பிரையன் லாரா, காலிஸ், சங்­கக்­கார உள்­ளிட்ட பல வீரர்கள் விளை­யா­டு­கின்­றனர்.

இந்தப் போட்­டிகள் வரும் நவம்பர் 7 (நியூயார்க்), 11 (ஹவுஸ்டான்), 14ம் (லாஸ் ஏஞ்சல்ஸ்) திக­திகள் முறையே 3 கண்­காட்சி டி20 போட்­டிகள் அரங்­கே­று­கின்­றன.

இந்தப் போட்­டிகள் உலக அளவில் கிரிக்­கெட்டை கொண்டு செல்ல உத­வி­யாக இருக்கும் என்று சச்சின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.