அன்று சங்கா - மஹேல ஜோடி : இன்று திமுத் - சந்திமால் ஜோடி

மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் மூன்றாவது விக்கெட்டுக்காக இணைந்து கொண்ட திமுத் கருணாரட்ன, தினேஷ் சந்திமால் ஜோடி 228 ஓட்டங்களை பகிர்ந்துகொண்டனர்.  

இதன் மூலம் அவ்வணிக்கு  எதிராக  அதிகூடிய மூன்றாவது விக்கெட்டுக்கான இணைப்பாட்ட சாதனையை நிலைநாட்டியுள்ளனர்.
முன்னதாக  நட்சத்திர வீரர்களான மஹேல ஜயவர்தன மற்றும் குமார் சங்கக்கார ஜோடி 2001ஆம் ஆண்டு நவம்பர் மாதம் காலியில் நடைபெற்ற  மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான போட்டியில் 162 ஓட்டங்களைப் பெற்றமையே அதிகூடிய இணைப்பாட்டமாக இருந்தது. 

இரு அணிகளுக்குமிடை யிலான முதலாவது  டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நேற்று காலை 10 மணிக்கு ஆரம்பமானது.

இரண்டு விக்கெட்டுக்களை இழந்து 250 ஓட்டங்களை பெற்ற நிலையில் முதல் இன்னிங்ஸின் இரண்டாம் நாளை தொடர்ந்த cஅணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து  484 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. 

135 ஓட்டங்களுடன் களத்தில் இருந்த திமுத் கருணாரத்ன நேற்றும் பிற்பகல்வரை களத்தில் நின்றார்.  அவர் 186 ஓட்டங்களைப்
பெற்ற நிலையில் ஆட்டமிழந்தார். 

அவருடன் இணைந்தாடிய தினேஷ் சந்திமால் 151 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார். 

அணித்தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ் 48 ஓட்டங்களையும், குசல் பெரேரா 23 ஓட்டங்களை யும் பெற்றனர்.

பந்து வீச்சில்
மேற்கிந்தியா சார்பில் டிவேன் டிரா பிஷு 4 விக்கெட்டுக் களையும் ஜெரோம் டெய்லர் 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர். 

பதிலுக்கு தமது முதலாவது இன்னிங்ஸை தொடங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணி ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட்டுக்களை இழந்து 66 ஓட்டங்களை பெற்றுள்ளது. 

இந்த 2 விக்கெட்டுக்களையும் ரங்கன ஹேரத் வீழ்த்தினார். போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று தொடரவுள்ளது.