மஹேல

அன்று சங்கா - மஹேல ஜோடி : இன்று திமுத் - சந்திமால் ஜோடி

மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் மூன்றாவது விக்கெட்டுக்காக இணைந்து கொண்ட திமுத் கருணாரட்ன, தினேஷ் சந்திமால் ஜோடி 228 ஓட்டங்களை பகிர்ந்துகொண்டனர்.  

இதன் மூலம் அவ்வணிக்கு  எதிராக  அதிகூடிய மூன்றாவது விக்கெட்டுக்கான இணைப்பாட்ட சாதனையை நிலைநாட்டியுள்ளனர்.
முன்னதாக  நட்சத்திர வீரர்களான மஹேல ஜயவர்தன மற்றும் குமார் சங்கக்கார ஜோடி 2001ஆம் ஆண்டு நவம்பர் மாதம் காலியில் நடைபெற்ற  மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான போட்டியில் 162 ஓட்டங்களைப் பெற்றமையே அதிகூடிய இணைப்பாட்டமாக இருந்தது. 

இங்கிலாந்து அணியின் ஆலோசகரானார் மஹேல....!

இங்­கி­லாந்து கிரிக்கெட் அணியின் துடுப்­பாட்ட ஆலோ­ச­க­ராக இலங்கை அணியின் முன்னாள் நட்­சத்­திர வீரர் மஹேல ஜெய­வர்த்­தன செயற்­ப­ட­வுள்ளார்.

இங்­கி­லாந்து மற்றும் பாகிஸ்தான் அணி­க­ளுக்கு இடை­யி­லான டெஸ்ட் தொடர் எதிர்­வரும் ஒக்­டோபர் மாதம் ஐக்­கிய அரபு எமி­ரேட்சில் நடை­பெ­ற­வுள்­ளது.

இந்த தொட­ருக்­காக இங்­கி­லாந்து அணியின் துடுப்­பாட்ட ஆலோ­ச­க­ராக மஹேல செயல்­ப­ட­வி­ருப்­ப­தாக இங்­கி­லாந்து கிரிக்கெட் வாரியம் அறி­வித்­துள்­ளது.

அதே போல் காலிங்வூட் ஒருநாள் மற்றும் டி20 போட்­டி­க­ளுக்­கான ஆலோ­ச­க­ராக செயற்­ப­டுவார் எனவும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

சங்காவை புகழ்ந்து தள்ளும் மஹேல...!

இலங்கை அணி சர்­வ­தேச போட்­டி­களில் விளை­யா­டிய நாளில் இருந்து இது­வ­ரையில் உள்ள துடுப்­பாட்ட வீரர்­களில் மிகவும் சிறந்த துடுப்­பாட்ட வீரர் குமார் சங்­கக்­கா­ரதான் என்று மஹேல புக­ழாரம் சூட்­டி­யுள்ளார்.

இலங்கை அணியில் விக் கெட் காப்­பா­ள­ராக கள­மி­றங்­ கிய சங்­கக்­கார, பின்னர் தலை­சி­றந்த துடுப்­பாட்ட வீர­ராக மாறினார். அவர் டெஸ்ட் போட்­டிகளில் 12 ஆயிரம் ஓட்­டங்­க­ளுக்கு மேலும், ஒருநாள் போட்­டிகளில் 14 ஆயிரம் ஓட் ­டங்­க­ளுக்கு மேலும் குவித்­துள்ளார்.

தற்­போது இந்­திய கிரிக் கெட் அணி இலங்­கையில் விளை­யாட தயா­ராகிக் கொண்­டி­ருக்­கி­றது.

Subscribe to RSS - மஹேல