பெடரர்

ஷாங்காய் டென்னிஸ் : பெடரர் தோல்வி

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி சீனாவில் நடந்து வரு­கி­றது. இதன் ஆண்கள் ஒற்­றையர் பிரிவு 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தர வரி­சையில் 3-வது இடத்தில் இருக்கும் ரோஜர் பெடரர் (சுவிட்­சர்­லாந்து), தர வரி­சையில் 70-வது இடத்தில் உள்ள ஸ்பெயின் வீரர் ஆல்பர்ட் ராமோஸ்சை சந்­தித்தார். 

இதில் பெடரர் 6-7 : 4-7, 6-2 : 3-6 என்ற செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளி­யே­றினார்.

 

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் காலிறுதி : பெடரர், பெரர், முர்ரே காலி­று­திக்குள் : வெளியேறினார் சரபோவா

 

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்­டியில் ஸ்விட்­சர்­லாந்தின் ரோஜர் பெடரர், ஸ்பெயினின் டேவிட் பெரர், பிரிட்­டனின் ஆன்டி முர்ரே ஆகியோர் காலி­று­திக்கு முன்­னே­றி­யுள்­ளனர்.

பிரான்ஸ் தலை­நகர் பாரிஸில் நடை­பெற்று வரும் இந்தப் போட்­டியில் நேற்­று­முன்­தினம் நடை­பெற்ற ஆடவர் ஒற்­றையர் 4 ஆவது சுற்றில் போட்டித் தர­வ­ரி­சையில் 2 ஆவது இடத்தில் இருக்கும் ரோஜர் பெடரர் 6:3, 4:6, 6:4, 6:1 என்ற செட் கணக்கில் பிரான்ஸின் கேல் மான்­பில்ஸை தோற்­க­டித்தார்.

மான்­பில்­ஸுடன் இது­வரை 13 முறை மோதி­யி­ருக்கும் பெடரர், 9 ஆவது வெற்­றியைப் பதிவு செய்­துள்ளார்.

Subscribe to RSS - பெடரர்