தோல்வி

ஷாங்காய் டென்னிஸ் : பெடரர் தோல்வி

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி சீனாவில் நடந்து வரு­கி­றது. இதன் ஆண்கள் ஒற்­றையர் பிரிவு 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தர வரி­சையில் 3-வது இடத்தில் இருக்கும் ரோஜர் பெடரர் (சுவிட்­சர்­லாந்து), தர வரி­சையில் 70-வது இடத்தில் உள்ள ஸ்பெயின் வீரர் ஆல்பர்ட் ராமோஸ்சை சந்­தித்தார். 

இதில் பெடரர் 6-7 : 4-7, 6-2 : 3-6 என்ற செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளி­யே­றினார்.

 

உலகக் கிண்ண வலைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி : மீண்டும் தோல்வியைத் தழுவிய இலங்கை அணி

உலகக் கிண்ண வலைப்­பந்­தாட்டப் போட்­டி­களில் சிட்னி ஒலிம்பிக் பாரக் அல்ஃபோன்ஸ் எரினா அரங்கில் நேற்று நடை­பெற்ற  குழு எச் இற்­கான மற்­றொரு தகு­திகாண் போட்­டி­யிலும் இலங்கை தோல்வியடைந்­தது.

நேற்­றைய போட்­டியில் இலங்­கையை எதிர்த்­தா­டிய ஸ்கொட்­லாந்து 59 –  27 என்ற கோல்கள் அடிப் ­ப­டையில் வெற்­றி­யீட்­டி­யது.

உலகக் கிண்ண வலைப்­பந்­தாட்டப் போட்­டி­களில் நான்­கா­வது தட­வை­யாக ஒவ்­வொரு கால்­ப­கு­தி­யிலும் இரட்டை இலக்க எண்­ணிக்­கையைப் பெறத்­த­வ­றி­யது.

இவனோவிக் அதிர்ச்சி தோல்வி

கிராண்ட்ஸ்லாம் போட்­டி­களில் ஒன்­றான விம்­பிள் டன் டென்னிஸ் போட்டி லண்­டனில் நடை­பெற்று வரு­கி­றது.

முன்­னணி வீராங்­க­னை­களில் ஒரு­வ­ரான அனா இவ­னோவிக்(செர்­பியா) 2ஆவது சுற்றில் அதிர்ச்­சி­க­ர­மாக தோற்றார்.

7ஆவது வரி­சையில் இருக்கும் அவர் 3–6, 4–6 என்ற செட் கணக்கில் அமெ­ரிக்­காவைச் சேர்ந்த பெதா­னி­யிடம் தோற்றார்.

உலகின் முதல் நிலை வீராங்­க­னை­யான செரீனா வில்­லியம்ஸ் (அமெ­ரிக்கா) 2ஆவது சுற்றில் ஹங்கே­ரியைச் சேர்ந்த போபோசை எதிர் கொண்டார்.

இதில் செரீனா வில்­லியம்ஸ் 6–4, 6–1 என்ற நேர் செட் கணக்கில் வென்று 3ஆவது சுற்­றுக்கு முன்­னே­றினார்.

Subscribe to RSS - தோல்வி