டோனி

டோனிக்கு ஆத­ரவு : முன்னாள் இந்­திய ஜாம்­பவான் கவாஸ்கர்

இந்­திய அணித்­த­லைவர் டோனிக்கு முன்னாள் இந்­திய ஜாம்­பவான் கவாஸ்கர் ஆத­ரவு தெரி­வித்­துள்ளார்.

தென் ஆ­பி­ரிக்­கா­வுக்கு எதி­ரான முதல் ஒருநாள் போட்­டியில் இந்­திய அணி தோற்­றதால் அணித்­த­லைவர் டோனி மீது விமர்ச­னங்கள் எழுந்­தன.

இந்­திய அணியில் டோனியின் இடம் பற்­றியும், அவ­ரது தலைவர் பதவி பற்­றியும் பரி­சீ­லிக்க வேண்டும் என்றும் பலரும் குற்றம் சாட்­டினர்.

பணக்கார வீரர்கள் பட்டியலில் இடம் பிடித்தார் டோனி...

உலகளவில் 100 பணக்கார விளையாட்டு வீரர்களின் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது. 

2015வது ஆண்டுக்கான அதிக ஊதியம் பெறும் விளையாட்டு வீரர்கள் என்ற அடிப்படையில் இந்த பட்டியல் வெளியிடப் பட்டுள்ளது.

அமெரிக்க குத்துச் சண்டை வீரரான மேவெதர் இந்த பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். அவர் வருமானம், 300 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும். கடந்த 4 வருடங்களில் 3வது முறையாக மேவெதர் முதலிடத்தை பிடித்துள்ளார்.

160 மில்லியன் டொலர் வருமானம் பெறும் குத்துச்சண்டை வீரர் போக்குயிடோ இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். 7

ஐ.பி.எல் தொடரின் 2வது தகுதிச் சுற்றுப் போட்டி நாளை : வெல்வது யார் ? சென்னையா? பெங்களூரா?

இந்தப் போட்டி சென்னை அணித்தலைவர் டோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் நடப்பதால் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

முதல் தகுதிச்சுற்றில் சென்னை அணி நேற்று முன்தினம் மும்பையை எதிர்கொண்டது.

இதில் சிறப்பான ஆட்டத்தை சென்னை அணி வெளிப்படுத்தினாலும், எதிர்பாராத விதமாக தோல்வியைத் தழுவியது.

இருப்பினும் சென்னை அணிக்கு மற்றொரு வாய்ப்பிருக்கிறது.

இந்த வாய்ப்பை தவறவிடமால் பெங்களூரை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேற சென்னை அணி முனைப்புடன் இருக்கிறது.

ஐ.பி.எல் போட்டிப் பட்டியலில் சென்னை அணி தொடர்ந்தும் முன்னிலையில் : அணி வீரர்களே காரணம் என்கிறார் அணித்தலைவர்

நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் சென்னை- பஞ்சாப் அணிகள் மோதின.

இதில் பஞ்சாப் அணியின் எளிய இலக்கான 131 ஓட்டங்களை சென்னை அணி அசால்டாக எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இது சென்னை அணியின் 9வது வெற்றியாகும். இதன் மூலம் புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்தது.

இது குறித்து சென்னை அணித்தலைவர் டோனி கூறுகையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடும் சர்வதேச வீரர்கள் சிறந்த தலைவர்கள் ஆவார்கள்.

மில்லரின் கேட்சை ஜடேஜா பிடித்தது மிகவும் சிறப்பான ஒன்றாகும். எங்கள் அணியில் உள்ள இளம் வீரர்கள் மிகவும் சிறப்பாக விளையாடுகிறார்கள்.

அதிரடி ஆட்டத்தில் முதலிடத்தை பிடிப்பது கொல்கத்தாவா...? சென்னையா...?

ஐபிஎல் லீக் ஆட்டத்தில் இன்று சென்னை அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன.

சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 6 ஆட்டங்களில் விளையாடி, 5 வெற்றி, ஒரு தோல்வியை சந்தித்துள்ளதோடு, புள்ளிகள் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது.

கொல்கத்தா அணி இதுவரை 5 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி யையும், 2 தோல்வியையும் பதிவு செய்துள்ளது.

மற்றொரு ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. அந்த அணி 7 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளது.

போக்குவரத்து விதிகளை மீறிய டோனி : அபராதம் விதித்த பொலிஸ்

போக்குவரத்து விதிகளை மீறிய இந்திய அணித்தலைவர் டோனிக்கு ரஞ்சி பொலிஸார் அபராதம் விதித்துள்ளனர்.

பைக் பிரியரான டோனி மிகவும் பெறுமதியான பலதரப்பட்ட பைக்குகளை வைத்துள்ளார்.

தற்போதைய நிலவரப்படி, ராஞ்சியில் உள்ள அவரின் வீட்டில் மட்டும், 16 பைக்குகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதுதவிர, சென்னை, மும்பை ஆகிய நகரங்களுக்கு வந்தால், அவர் ஜாலியாக பயணிப்பதற்காக, அந்த நகரங்களிலும், தலா இரண்டு பைக்குகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

Subscribe to RSS - டோனி