டெஸ்ட் போட்டி

அன்று சங்கா - மஹேல ஜோடி : இன்று திமுத் - சந்திமால் ஜோடி

மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் மூன்றாவது விக்கெட்டுக்காக இணைந்து கொண்ட திமுத் கருணாரட்ன, தினேஷ் சந்திமால் ஜோடி 228 ஓட்டங்களை பகிர்ந்துகொண்டனர்.  

இதன் மூலம் அவ்வணிக்கு  எதிராக  அதிகூடிய மூன்றாவது விக்கெட்டுக்கான இணைப்பாட்ட சாதனையை நிலைநாட்டியுள்ளனர்.
முன்னதாக  நட்சத்திர வீரர்களான மஹேல ஜயவர்தன மற்றும் குமார் சங்கக்கார ஜோடி 2001ஆம் ஆண்டு நவம்பர் மாதம் காலியில் நடைபெற்ற  மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான போட்டியில் 162 ஓட்டங்களைப் பெற்றமையே அதிகூடிய இணைப்பாட்டமாக இருந்தது. 

இலங்கையுடன் தீர்க்கமான டெஸ்ட் போட்டியில் களமிறங்கும் பாகிஸ்தான்

தீர்க்கமான டெஸ்ட் போட்டி நாளை ஆரம்பம்

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் பரஸ்­பரம் தமது ஆட்­டங்­களை வெளிப்­ப­டுத்­திய நிலையில், தொடர் வெற்­றியை தீர்­மா­னிக்கும் மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் ஆட்டம் நாளை ஆரம்­ப­மா­க­வுள்­ளது.

ஏற்­க­னவே காலியில் இடம்­பெற்ற முத­லா­வது போட்­டியில் பாகிஸ்தான் அணி 10 விக்­கெட்­டு­களால்  வெற்­றி­பெற்­றது.  கொழும்பு சரா ஓவல் மைதா­னத்தில் இடம்­பெற்ற இரண்டு டெஸ்ட் போட்­டியில் இலங்கை  அணி 7 விக்­கெட்­டுகள் வித்­தி­யா­சத்தில் வெற்­றி­பெற்­றது. இதனால் தொடர் 1 க்கு 1 என்ற வகையில் சம­நி­லையில் உள்­ளது.

இலங்கை அணி அசத்தல் : சதம் விளாசினார் கவுஷால் சில்வா...

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் கவுஷால் சில்வா சதம் விளாசினார்.

இலங்கை சென்றுள்ள பாகிஸ்தான் அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் காலேயில் நடக்கிறது.

முதல் நாள் ஆட்டம் மழையால் ரத்தானது. நேற்று 2ம் நாள் ஆட்டம் நடந்தது. நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணித்தலைவர் மிஸ்பா, களத்தடுப்பை தெரிவு செய்தார்.

இதைத் தொடர்ந்து களமிறங்கிய இலங்கை அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் கருணாரத்னே (21) ஏமாற்றினார்.

பின் ஜோடி சேர்ந்த கவுஷால் சில்வா, சங்கக்காரா ஜோடி சிறப்பாக விளையாடியது.

Subscribe to RSS - டெஸ்ட் போட்டி