டென்னிஸ்

ஷாங்காய் டென்னிஸ் : பெடரர் தோல்வி

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி சீனாவில் நடந்து வரு­கி­றது. இதன் ஆண்கள் ஒற்­றையர் பிரிவு 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தர வரி­சையில் 3-வது இடத்தில் இருக்கும் ரோஜர் பெடரர் (சுவிட்­சர்­லாந்து), தர வரி­சையில் 70-வது இடத்தில் உள்ள ஸ்பெயின் வீரர் ஆல்பர்ட் ராமோஸ்சை சந்­தித்தார். 

இதில் பெடரர் 6-7 : 4-7, 6-2 : 3-6 என்ற செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளி­யே­றினார்.

 

ஓய்வு முடிவை பெடரர் அறிவிப்பாரா?

டென்னிஸ் உலகின் ஜாம்­பவான் ரோஜர் பெடரர். 17 கிராண்ட்­சிலாம் பட்டம் வென்று சரித்­திரம் படைத்து இருக்­கிறார்.

34 வய­தான பெடரர் கிராண்ட்­சிலாம் பட்டம் வென்று 3 ஆண்­டு­க­ளுக்கு மேல் ஆகி­றது. கடை­சி­யாக 2012–ம் ஆண்டு விம்­பிள்டன் பட்­டத்தை கைப்­பற்­றினார்.

அதன்­பி­றகு 3 தடவை இறு­திப்­போட்­டிக்கு நுழைந்தும் பட்டம் வெல்ல இய­ல­வில்லை. கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் விம்­பிள்­ட­னிலும், சமீ­பத்தில் அமெ­ரிக்க ஓப­னிலும் ஜோகோ­விச்­சிடம் வீழ்ந்தார்.

முதல் 5 இடத்துக்குள் நான் இல்லை : கவலை வெளியிடு­ம் நடால்...

டென்னிஸ் விளை­யாட்டின் முன்­னணி வீர­ரான ரபேல் நடால் கடந்த 10 ஆண்­டு­களில் முதல் முறை­யாக சர்­வ­தேச தர­வ­ரி­சையில் முதல் 5 இடத்துக்குள் இடம்பிடிக்க தவறிவிட்டார்.

ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த 28-வய­தான ரபேல் நடால் இது­வரை ஒற்­றையர் பிரிவில் 14 கிராண்ட் சிலாம் பதக்­கத்தை வென்­றுள்ளார்.

சிறப்­பாக விளை­யாடி வந்த நடால் கடந்த சில மாதங்­க­ளாக சோபிக்க தவறிவரு­கிறார்.

நேற்றுமுன்தினம் நடை­பெற்ற மெட்ரிட் ஓபன் இறுதிப் போட்­டியில் ஆண்டி முர்­ரே­யிடம் நடால் தோல்­வி­ய­டைந்தார்.

முர்ரே இதற்கு முன் களிமண் ஆடு­க­ளத்தில் நடாலை வென்­றது கிடை­யாது. 

நடாலுக்கு டொக்டர் பட்டம் வழங்கி கௌரவிப்பு...

ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த பிரபல டென்னிஸ் வீரர் ரபேல் நடாலுக்கு ஐரோப்பிய பல்கலைக்கழகம் டொக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது.

மாட்ரிட் நகரில் நடைபெற்ற இந்த பட்டமளிப்பு விழாவில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டனர்.

அங்கு நடால் கருத்து தெரிவிக்கையில், 

குடும்பம், சமூகம், ஒழுக்கம், கட்டுப்பாடுகள் ஆகியவை விளையாட்டுத்துறையில் சாதிப்பதிற்கு முக்கிய காரணிகளாக உள்ளதுடன் இவைகளின் ஆதரவு இல்லாமல் விளையாட்டுத்துறை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் சிறந்த மனிதனாக உருவாகியிருக்க முடியாது எனவும் குறிப்பிட்டார். 

மியாமி ஓபன் டென்னிஸ்: ரபேல் நடால் அதிர்ச்சி தோல்வி

மியாமி ஓபன் டென்னிஸ் போட்டிகளில் நான்கு முறை இரண்டாமிடம் பிடித்த ரபேல் நடால், மூன்றாவது சுற்று ஆட்டத்தில் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.

ஞாயிறன்று நடைபெற்ற ஆண்கள் 3வது சுற்று ஆட்டத்தில் ஸ்பெயினின் பெர்ணாண்டோ வெர்டாஸ்கோவிடம் 6-4, 2-6, 6-3 என்ற செட் கணக்கில் நடால் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.

டென்னிஸ் ஒற்றையர் தர வரிசை பட்டியலில் 2வது இடத்தில் உள்ள நடாலை 34வது இடத்தில் உள்ள வெர்டாஸ்கோ வீழ்த்தினார்.

இது குறித்து  வெர்டாஸ்கோ கருத்து வெளியிடுகையில்,  நடால் போன்ற சிறந்த வீரரை எதிர்த்து விளையாடி வெற்றி பெறுவது டென்னிசில் மிகப்பெரிய விஷயம் என்றார்.

Subscribe to RSS - டென்னிஸ்