சங்கா

அன்று சங்கா - மஹேல ஜோடி : இன்று திமுத் - சந்திமால் ஜோடி

மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் மூன்றாவது விக்கெட்டுக்காக இணைந்து கொண்ட திமுத் கருணாரட்ன, தினேஷ் சந்திமால் ஜோடி 228 ஓட்டங்களை பகிர்ந்துகொண்டனர்.  

இதன் மூலம் அவ்வணிக்கு  எதிராக  அதிகூடிய மூன்றாவது விக்கெட்டுக்கான இணைப்பாட்ட சாதனையை நிலைநாட்டியுள்ளனர்.
முன்னதாக  நட்சத்திர வீரர்களான மஹேல ஜயவர்தன மற்றும் குமார் சங்கக்கார ஜோடி 2001ஆம் ஆண்டு நவம்பர் மாதம் காலியில் நடைபெற்ற  மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான போட்டியில் 162 ஓட்டங்களைப் பெற்றமையே அதிகூடிய இணைப்பாட்டமாக இருந்தது. 

முடக்கப்பட்டது சங்காவின் டுவிட்டர்...!

இலங்கை கிரிக் கெட் அணியின் ஜாம்­ப­வா­னான குமார் சங்­கக்­கார இந்­தி­யா­விற்கு எதி­ராக நடை­பெற்ற 2- ஆவது டெஸ்ட் போட்­டி­யுடன், சர்­வ­தேச கிரிக்­கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.

தற்­போது இங்­கி­லாந்தின் உள்ளூர் அணி­யான சசெக்ஸ் அணிக்­காக சங்­கக்­கார விளை­யாடி வரு­கிறார். இவர் சமூக வலைத்­த­ளங்கள் மூலம் தனது ரசி­கர்­க­ளுக்கு தனது கருத்து மற்றும் செய்­தி­களை வெளி­யிட்டு வரு­கிறார். இவ­ரது டுவிட்­டரை சுமார் 5 லட்சம் ரசி­கர்கள் பின்­தொ­டர்­கி­றார்கள்.

இந்­நி­லையில் அவ­ ரது டுவிட்டர் பக்­கத்தை கைப்­பற்­றிய ஹேக்­கர்கள் அதில் ஆபாச படத்தை வெளி­யிட்­டுள்­ளனர்.

கண்ணீரோடு விடைபெற்றார் சங்கா......!

இலங்கை மற்றும் இந்தி அணி­க­ளுக்­கி­டையில் இடம்­பெற்­று­வரும் இரண்­டா­வது டெஸ்ட் போட்­டி­யுடன் இலங்கை அணியின் நட்­சத்­திர வீரர் குமார் சங்­கக்­கார ஓய்வு பெறு­கின்றார். 

அணித்­த­லை­வ­ராக துடுப்­பாட்ட வீர­ராக விக்கெட் காப்­பா­ள­ராக சிரேஷ்ட வீர­ராக என சங்­காவின் பங்­க­ளிப்பு அவரின் 16 வருட கிரிக்கெட் வாழ்வில் அளப்­ப­ரி­யது. 

சர்­வ­தேச கிரிக்கெட் ரசி­கர்­களின் மனதை வென்ற வீரர்­களில் குமார் சங்­கக்­கா­ரவும் ஒருவர். எல்லா நாடு­க­ளிலும் இவருக்கு ரசிகர் பட்­டாளம் இருக்­கின்­றனர். 

சங்காவை புகழ்ந்து தள்ளும் மஹேல...!

இலங்கை அணி சர்­வ­தேச போட்­டி­களில் விளை­யா­டிய நாளில் இருந்து இது­வ­ரையில் உள்ள துடுப்­பாட்ட வீரர்­களில் மிகவும் சிறந்த துடுப்­பாட்ட வீரர் குமார் சங்­கக்­கா­ரதான் என்று மஹேல புக­ழாரம் சூட்­டி­யுள்ளார்.

இலங்கை அணியில் விக் கெட் காப்­பா­ள­ராக கள­மி­றங்­ கிய சங்­கக்­கார, பின்னர் தலை­சி­றந்த துடுப்­பாட்ட வீர­ராக மாறினார். அவர் டெஸ்ட் போட்­டிகளில் 12 ஆயிரம் ஓட்­டங்­க­ளுக்கு மேலும், ஒருநாள் போட்­டிகளில் 14 ஆயிரம் ஓட் ­டங்­க­ளுக்கு மேலும் குவித்­துள்ளார்.

தற்­போது இந்­திய கிரிக் கெட் அணி இலங்­கையில் விளை­யாட தயா­ராகிக் கொண்­டி­ருக்­கி­றது.

சர்வதேச டெஸ்ட் தர வரிசை : சங்கா, மத்தியூஸ், ஹேரத் ஆதிக்கம்

அவுஸ்­தி­ரே­லியா மற்றும் மேற்­கிந்­திய தீவுகள் அணிகளின் முத­லா­வது டெஸ்ட் போட்­டியை தொடர்ந்து சர்­வ­தேச கிரிக்கெட் கவுன்ஸில் டெஸ்ட் போட்­டிகள் அடிப்­ப­டை­யி­லான தர­வ­ரிசை பட்­டி­யலை வெளி­யிட்­டுள்­ளது.

இந்த தர­வ­ரி­சையில்  நட்­சத்­திர துடுப்­பாட்ட வீரர் குமார் சங்­கார, அணித்­த­லை­வரும் சகல துறை ஆட்­டக்­கா­ர­ரு­மான அஞ்­சலோ மத்­தியூஸ் மற்றும்  சுழல் பந்து வீச்­சாளர் ரங்­கன ஹேரத் ஆகிய இலங்கை அணியின் வீரர்கள் தொடர்ந்தும் ஆதிக்கம் செலுத்தி வரு­கின்­றனர்

ஐ.சி.சி. தர­வ­ரிசை பட்­டி­யல் : இரண்டாமிடத்தில் சங்கா...

ஐ.சி.சி. தர­வ­ரிசை பட்­டி­யலின் துடுப்­பாட்ட வீரர்கள் வரி­சையில் இலங்கை அணியின் நட்­சத்­திர துடுப்­பாட்ட வீரர் குமார் சங்­கக்­கார இரண்டாம் இடத்தில் உள்ளார்.

பட்­டி­யலில் துடுப்­பாட்­டத்தில் டி வில்­லியர்ஸ் மற்றும் பந்­து­வீச்சில் ஸ்டார்க் ஆகியோர் முத­லிடம் பிடித்­துள்­ளனர்.

உலகக் கிண்ணம் முடிந்­துள்ள நிலையில் ஐ.சி.சி. துடுப்­பாட்ட மற்றும் பந்­து­வீச்சு தர­வ­ரி­சையை வெளி­யிட்­டுள்­ளது. துடுப்­பாட்ட வீரர்கள் வரி­சையில் தென்­னா­பி­ரிக்க அணியின் தலைவர் டி வில்­லியர்ஸ் முத­லி­டத்­திலும் பந்­து­வீச்சில் அவுஸ்­தி­ரே­லிய வீரர் மிட்செல் ஸ்டார்க்கும் முத­லி­டத்தில் உள்­ளனர்.

Subscribe to RSS - சங்கா