கிரிக்கெட்

காதலிக்காக அணி மாறிய தாஹிர்

தென்­னா­பி­ரிக்க கிரிக்கெட் அணியில் இடம் பெற்று சுழற்­பந்து வீச்சில் கலக்கி வரும் இம்ரான் தாஹிர், பாகிஸ்­தானை சேர்ந்­தவர். இந்­திய வம்­சா­வளி பெண்ணை காத­லித்து மணந்து கொண்ட இம்ரான் தாஹிர், பின்னர் தென்­னாபி­ரிக்க அணியில் இடம் பெற்றார்.

1979ஆ-ம் ஆண்டு பாகிஸ்­தானில் உள்ள லாகூரில் பிறந்த இம்ரான் தாஹி­ருக்கு தற்­போது 36 வய­தா­கி­றது.  1998ஆ-ம் ஆண்டு பாகிஸ்தான்
'ஏ' அணியில் இடம் பெற்­றி­ருந்த தாஹிர், தென்­னா­பி­ரிக்க சுற்­றுப்­ப­யணம் மேற்­கொண்­டி­ருந்த அணியில் இடம் பெற்­றி­ருந்தார்.

மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை கிரிக்கெட் பயிற்சிப் போட்டி சமநிலையில்

மேற்­கிந்­தியத் தீவுகள் கிரிக்கெட் அணி இலங்­கையில் சுற்­றுப்­ப­யணம் மேற்­கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் இரண்டு டி20 போட்­டி­களில் விளை­யா­டு­கி­றது. முதல் டெஸ்ட் தொடர் எதிர்­வரும் 14ம் திகதி தொடங்­கு­கி­றது.

இதற்கு முன்­ன­தாக 3 நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்­டத்தில் இலங்கை கிரிக்கெட் வாரி­யத்­த­லைவர் லெவன் -மேற்­கிந்­திய தீவுகள் அணிகள் விளை­யா­டி­யது.

இதில் முதலில் துடுப்­பெ­டுத்­தா­டிய மேற்­கிந்­திய தீவுகள் அணி முதல் இன்­னிங்சில் 209 ஓட்­டங்­களில் சுருண்­டது. இலங்கை அணி சார்பில் ரந்தீவ் ஐந்து விக்­கெட்­டுக்கள் வீழ்த்­தினார்.

அமெரிக்காவில் இணையும் சச்சின், சங்கக்கார...!

அமெ­ரிக்­காவில் நடக்க­வுள்ள கண்­காட்சி டி20 கிரிக்கெட் போட்­டியில் சச்சின், வார்னே, சங்­கக்­கார உள்­ளிட்ட முன்னாள் வீரர்கள் விளை­யாட உள்­ளனர்.

அமெ­ரிக்­காவில் கிரிக்­கெட்டை பிர­ப­லப்­ப­டுத்தும் முயற்­சிகள் நடந்து வரு­கின்­றன. இதன் ஒரு பகு­தி­யாக இந்­திய ஜாம்­பவான் சச்சின், அவுஸ்­தி­ரே­லிய முன்னாள் சுழல் ஜாம்­பவான் வார்னே உள்­ளிட்டோர் பங்­கேற்கும் போட்­டிகள் நடக்­கி­றது.

இந்தப் போட்­டியில் கங்­குலி, லட்­சுமண், வாசிம் அக்ரம், பிரையன் லாரா, காலிஸ், சங்­கக்­கார உள்­ளிட்ட பல வீரர்கள் விளை­யா­டு­கின்­றனர்.

கடைசி ஒருநாள் போட்டியில் அசத்தல் : தொடரை வென்றது பாகிஸ்தான் அணி

5 விக்கெட் வீழ்த்­திய பிலால் ஆசிப்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி சிம்­பாப்­வேயில் சுற்­றுப்­ப­யணம் செய்து விளை­யா­டியது.

இரு அணிகள் இடை­யே­யான 3 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் முதல் ஆட்­டத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்­றது.

2வது ஆட்­டத்தின் போது மழை குறுக்­கிட்­டதால் டக்வொர்த் லீவிஸ் விதிப்­படி சிம்­பாப்வே வெற்றி பெற்­ற­தாக அறி­விக்­கப்­பட்­டது.

இந்­நி­லையில் கடைசி போட்டி நேற்று முன்தினம் ஹரா­ரேயில் நடை­பெற்­றது. முதலில் பேட் செய்த சிம்­பாப்வே அணி 38.5 ஓவரில் 161 ஒட்டங்களுக்கு சுருண்­டது.

மோடியிடம் பாராட்டு பெற்ற சங்கா...!

கிரிக்கெட் மைதா­னங்­களில் இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்­கக்­கா­ராவை தாம் இழப்­ப­தாக இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடி தெரி­வித்­துள்ளார்.

இந்­தி­யா­வுக்கு இலங்கை பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க சுற்­றுப்­ப­யணம் மேற்­கொண்­டுள்ளார்.

இந்­நி­லையில் செய்­தி­யாளர் சந்­திப்பின் போது பேசிய இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடி, சமீ­பத்தில் முடிந்த இந்­தியா- இலங்கை கிரிக்கெட் தொடர் இரு நாடு­க­ளுக்கும் இடையே அர­சியல் ரீதி­யான நட்­பு­றவை ஏற்­ப­டுத்­தி­ய­தாக தெரி­வித்­துள்ளார்.

இங்கிலாந்து அணியின் ஆலோசகரானார் மஹேல....!

இங்­கி­லாந்து கிரிக்கெட் அணியின் துடுப்­பாட்ட ஆலோ­ச­க­ராக இலங்கை அணியின் முன்னாள் நட்­சத்­திர வீரர் மஹேல ஜெய­வர்த்­தன செயற்­ப­ட­வுள்ளார்.

இங்­கி­லாந்து மற்றும் பாகிஸ்தான் அணி­க­ளுக்கு இடை­யி­லான டெஸ்ட் தொடர் எதிர்­வரும் ஒக்­டோபர் மாதம் ஐக்­கிய அரபு எமி­ரேட்சில் நடை­பெ­ற­வுள்­ளது.

இந்த தொட­ருக்­காக இங்­கி­லாந்து அணியின் துடுப்­பாட்ட ஆலோ­ச­க­ராக மஹேல செயல்­ப­ட­வி­ருப்­ப­தாக இங்­கி­லாந்து கிரிக்கெட் வாரியம் அறி­வித்­துள்­ளது.

அதே போல் காலிங்வூட் ஒருநாள் மற்றும் டி20 போட்­டி­க­ளுக்­கான ஆலோ­ச­க­ராக செயற்­ப­டுவார் எனவும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

கண்ணீரோடு விடைபெற்றார் சங்கா......!

இலங்கை மற்றும் இந்தி அணி­க­ளுக்­கி­டையில் இடம்­பெற்­று­வரும் இரண்­டா­வது டெஸ்ட் போட்­டி­யுடன் இலங்கை அணியின் நட்­சத்­திர வீரர் குமார் சங்­கக்­கார ஓய்வு பெறு­கின்றார். 

அணித்­த­லை­வ­ராக துடுப்­பாட்ட வீர­ராக விக்கெட் காப்­பா­ள­ராக சிரேஷ்ட வீர­ராக என சங்­காவின் பங்­க­ளிப்பு அவரின் 16 வருட கிரிக்கெட் வாழ்வில் அளப்­ப­ரி­யது. 

சர்­வ­தேச கிரிக்கெட் ரசி­கர்­களின் மனதை வென்ற வீரர்­களில் குமார் சங்­கக்­கா­ரவும் ஒருவர். எல்லா நாடு­க­ளிலும் இவருக்கு ரசிகர் பட்­டாளம் இருக்­கின்­றனர். 

இலங்கை – இந்­திய அணிகள் மோதும் முத­லா­வது டெஸ்ட் போட்டி இன்று

காலை 10 மணிக்கு காலி சர்வதேச கிரிக் கெட் அரங்கில் தொடங்குகிறது.  3 டெஸ்ட் போட்­டிகள் கொண்ட தொடரில் விளை­யா­டு­வ­தற்­காக இந்­திய கிரிக்கெட் அணி இலங்­கைக்கு சுற்றுப் பயணம் மேற்­கொண்­டுள்­ளது.

இலங்கை கிரிக்கெட் சபைத் தலைவர் அணிக்கு எதி­ரான 3 நாள் பயிற்சி ஆட்­டத்தில் இந்­திய அணி விளை­யா­டி­யது. இதில் சிறப்­பான ஆட்­டத்தை இந்­திய அணி வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்­தது.

அதே­வேளை இலங்கை அணி சமீ­பத்தில் பாகிஸ்­தா­னிடம் தொடரை இழந்­தது. அந்த தோல்­வியின் கார­ண­மாக வெற்­றி­பெற்றே ஆக வேண்­டிய நிலையில் இலங்கை அணி உள்­ளது.

இலங்கை அணிக்குள் புதிய நட்சத்திரம்...!

இந்­திய கிரிக்கெட் அணி இலங்­கையில் சுற்­றுப்­ப­யணம் மேற்­கொண்­டுள்­ளது.

விராட் கோஹ்லி தலை­மை­யி­லான இந்­திய அணி இலங்­கை­யுடன் மூன்று டெஸ்ட் போட்­டி­களில் விளை­யாட இருக்­கி­றது.

முதல் டெஸ்ட் போட்டி எதிர்­வரும் 12ஆம் திகதி காலியில் தொடங்க இருக்­கி­றது. இதற்­கான இலங்கை வீரர்கள் அறி­விக்­கப்­பட்­டுள்­ளனர்.

இந்த அணியில் புது­முக வீரர் விஷ்வா பெர்­னாண்டோ இடம் பெற்­றுள்ளார். 

தற்­போது டெஸ்ட் அணியில் சேர்க்­கப்­பட்­டுள்ள புது­முக வீரர் விஷ்வா பெர்­னாண்டோ இந்­தி­யா­விற்கு எதி­ரான பயிற்சி போட்­டியில் இலங்கை கிரிக்கெட் சபைத் தலைவர் லெவன் அணியில் இடம்­பெற்­றி­ருந்தார்.

இலங்கை - பாகிஸ்தான் முதலாவது இருபதுக்கு 20 போட்டி இன்று...!

பாகிஸ்தான் வீரர்கள்

 • சஹிட் அப்ரிடி (தலைவர்)
 • அஹமட் செஷாட்
 • நௌமன் அன்வர்
 • மொஹமட் ஹபீஸ்
 • முக்தார் அஹமட்
 • உமர் அக்மல்
 • சுஹைப் மலிக்
 • மொஹமட் ரில்வான்
 • சப்ராஸ் அஹமட்
 • யாஷிர் ஷா
 • சுஹைல் தன்விர்
 • இமாட் வசீம்
 • அன்வர் அலி
 • மொஹமட் இர்பான்
 • ​ஷியா உல் ஹக்

இலங்கை வீரர்கள்

Pages

Subscribe to RSS - கிரிக்கெட்