கால்பந்தாட்டம்

இலங்கை கால்பந்தாட்ட அபிவிருத்திக்கு உதவுவதாக ஃபீஃபா தலைவர் செப் பிளட்டர் மீண்டும் உறுதி

இலங்கை கால்­பந்­தாட்ட அபி­வி­ருத்திப் பணி­க­ளுக்கு தொடர்ந்து உத­வு­வ­தாக சர்­வ­தேச கால்­பந்­தாட்ட சங்­கங்­களின் சம்­மே­ளனத் (ஃபீஃபா) செப் ப்ளட்டர் உறுதி வழங்­கி­யுள்ளார்.

இலங்கை கால்­பந்­தாட்ட சம்­மே­ளனத் தலைவர் அநுர டி சில்வா, முன்னாள் தலைவர் ரஞ்சித் ரொட்­றிகோ ஆகியோர் சூரிச் நக­ரி­லுள்ள சர்­வ­தேச கால்­பந்­தாட்ட சங்­கங்­களின் சம்­மே­ளனத் தலை­மை­ய­கத்தில் வைத்து செப் பிளட்டர் சந்­தித்­த­போது அவர் இந்த உறு­தியை வழங்­கி­யுள்ளார்.

கோபா அமெரிக்கா கால்பந்தாட்ட தொடர்: போராடி வென்றது பிரேசில்...

சிலியில் நடை­பெற்று வரும் கோபா அமெ­ரிக்கா கால்­பந்து போட்­டியில் பெரு அணியை கடும் போராட்­டத்­துக்குப் பிறகு 2-–1 என்ற கோல் கணக்கில் வென்­றது பிரேசில் அணி.

சிலியில் நடை­பெறும் கோபா அமெ­ரிக்கா கால்­பந்து போட்டித் தொடரில் 'சி'-பி­ரிவு ஆட்­டத்தில் பிரேசில் - பெரு அணி­க­ளுக்கு இடை­யி­லான போட்டி மிகவும் விறு­வி­றுப்­பாக அமைந்­தது. தொடக்கம் முதலே இரு அணி வீரர்­களும் சிறப்­பாக விளை­யா­டினர்.

அமெரிக்க கால்பந்தாட்ட தொடர்: ஆர்ஜன்டீனாவுக்கு பரகுவே அதிர்ச்சி கொடுத்தது

சிலியில் நடை­பெறும் கோபா அமெ­ரிக்கா கால்­பந்து பி-பி­ரிவு ஆட்­டத்தில் 2 கோல்கள் பின் தங்­கி­யி­ருந்த பர­குவே, இடை­வே­ளைக்குப் பிறகு 2 கோல்­களைத் திருப்பி ஆர்­ஜன்­டீனா அணிக்கு எதி­ரான ஆட்­டத்தை அபா­ர­மாக சம­நி­லையில் முடித்து அவ்­வ­ணிக்கு அதிர்­ச்சி­கொ­டுத்­தது.

முதல் பாதி­யி­லேயே ஆர்­ஜன்­டீ­னாவின் பிர­பல வீரர்­க­ளான செர்­ஜியோ அக்­யூரோ மற்றும் லயோனல் மெஸ்ஸி ஆகியோர் 2 கோல்­களை அடித்து விட்­டனர்.

ஆனால் இடை­வே­ளைக்கு பிறகு ஆச்­ச­ரி­ய­க­ர­மான ஆட்­டத்தை வெளிப்­ப­டுத்­திய பரா­குவே அணியில் நெல்சன் ஹேடோ வால்டேஸ், லூகாஸ் பேரியஸ் ஆகியோர் 2 கோல்­களை அடித்­தனர்.

Subscribe to RSS - கால்பந்தாட்டம்