இலங்கை

மேற்­கிந்­திய டெஸ்ட் தொடரை கைப்­பற்­றுவோம் : மேத்யூஸ் நம்­பிக்கை

மேற்­கிந்­திய தீவுகள் அணிக்கு எதி­ரான டெஸ்ட் தொடரை கைப்­பற்­றுவோம் என்று இலங்கை அணித்­த­லைவர் மேத்யூஸ் நம்­பிக்கை தெரி­வித்­துள்ளார்.

மேற்­கிந்­திய தீவுகள் அணி இலங்­கைக்கு சுற்­றுப்­ப­யணம் மேற்­கொண்டு 2 டெஸ்ட் போட்­டிகள் கொண்ட தொடரில் விளை­யாடி வரு­கி­றது.

கலேவெலயில் நடந்த முதல் டெஸ்ட் போட்­டியில் இலங்கை இன்னிங்ஸ் மற்றும் 6 ஓட்­டங்­களால் அபார வெற்றி பெற்று அசத்­தி­யது.

இந்­நி­லையில் எதிர்­வரும் 22ஆம் திகதி இவ்­விரு அணி­க­ளுக்கு இடை­யே­யான 2ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கொழும்பில் நடக்­கி­றது.

மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை கிரிக்கெட் பயிற்சிப் போட்டி சமநிலையில்

மேற்­கிந்­தியத் தீவுகள் கிரிக்கெட் அணி இலங்­கையில் சுற்­றுப்­ப­யணம் மேற்­கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் இரண்டு டி20 போட்­டி­களில் விளை­யா­டு­கி­றது. முதல் டெஸ்ட் தொடர் எதிர்­வரும் 14ம் திகதி தொடங்­கு­கி­றது.

இதற்கு முன்­ன­தாக 3 நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்­டத்தில் இலங்கை கிரிக்கெட் வாரி­யத்­த­லைவர் லெவன் -மேற்­கிந்­திய தீவுகள் அணிகள் விளை­யா­டி­யது.

இதில் முதலில் துடுப்­பெ­டுத்­தா­டிய மேற்­கிந்­திய தீவுகள் அணி முதல் இன்­னிங்சில் 209 ஓட்­டங்­களில் சுருண்­டது. இலங்கை அணி சார்பில் ரந்தீவ் ஐந்து விக்­கெட்­டுக்கள் வீழ்த்­தினார்.

முடக்கப்பட்டது சங்காவின் டுவிட்டர்...!

இலங்கை கிரிக் கெட் அணியின் ஜாம்­ப­வா­னான குமார் சங்­கக்­கார இந்­தி­யா­விற்கு எதி­ராக நடை­பெற்ற 2- ஆவது டெஸ்ட் போட்­டி­யுடன், சர்­வ­தேச கிரிக்­கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.

தற்­போது இங்­கி­லாந்தின் உள்ளூர் அணி­யான சசெக்ஸ் அணிக்­காக சங்­கக்­கார விளை­யாடி வரு­கிறார். இவர் சமூக வலைத்­த­ளங்கள் மூலம் தனது ரசி­கர்­க­ளுக்கு தனது கருத்து மற்றும் செய்­தி­களை வெளி­யிட்டு வரு­கிறார். இவ­ரது டுவிட்­டரை சுமார் 5 லட்சம் ரசி­கர்கள் பின்­தொ­டர்­கி­றார்கள்.

இந்­நி­லையில் அவ­ ரது டுவிட்டர் பக்­கத்தை கைப்­பற்­றிய ஹேக்­கர்கள் அதில் ஆபாச படத்தை வெளி­யிட்­டுள்­ளனர்.

சர்மா, சந்திமலுக்கு தடை : அப­ராதம் விதித்­துள்­ளது ஐசிசி.

 இலங்கை இந்திய  டெஸ்ட் கிரிக்கட் போட்டிகளின் போது களத்தில் மோதல் போக்கைக் கடை­பி­டித்­த­தற்­காக இசாந்த் சர்மா மற்றும் இலங்கை வீரர் தினேஷ் சந்திமல் ஆகியோர் ஒரு போட்­டியில் விளை­யாட ஐசிசி தடை விதித்­துள்­ளது.

மேலும், மோச­மான நடத்­தைக்­காக இலங்கை வீரர்கள் லாஹிரு திரி­மானே, தம்­மிக பிரசாத் ஆகி­யோ­ருக்கு ஆட்டத் தொகையில் 50% அப­ராதம் விதித்­துள்­ளது ஐசிசி.

இதனால் தென் ஆப்­பி­ரிக்­கா­வுக்கு எதி­ராக மொஹா­லியில் நடை­பெறும் முதல் டெஸ்ட் போட்­டியில் இசாந்த் சர்மா விளை­யாட முடி­யாது. சந்திமல் மேற்­கிந்­திய தீவு­க­ளுக்கு எதி­ரான முதல் ஒருநாள் போட்­டியில் விளை­யாட முடி­யாது. 

கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி என்கிறார் கோலி...!

இலங்கை அணியை வீழ்த்திய பிறகு, இந்­திய டெஸ்ட் அணித்தலைவர் விராட் கோலி கூறு­கையில்,

இளம் வீரர்­களின் துணை­யுடன் இலங்கை மண்ணில் 22 ஆண்­டு­க­ளுக்கு பிறகு டெஸ்ட் தொடரை கைப்­பற்­றி­யது, மகத்­தான சாத­னை­யாகும்.

தொடரில் 0 -:1 என்ற கணக்கில் பின்­தங்கி இருந்து, மீண்டு வரு­வது எளி­தான காரியம் அல்ல. அது மட்­டு­மின்றி வெளி­நாட்டு மண்ணில் நாங்கள் 0 :-1 என்று இருந்து, தொடரை வென்­ற­தில்லை என்று சொன்­னார்கள்.

இப்­போது வர­லாறு படைத்து விட்டோம்.

அஷ்வினை புகழும் முரளி

இலங்கை ஆடு­க­ளத்தில் அஷ்­வினின் பந்­து­வீச்சு மிகவும் அபா­ர­மாக இருக் ­கி­றது. அவ­ரது பந்துஅதி­க­மாக பௌன்ஸ் ஆகி­றது.

அதில் விக்­கெட்­டு­களை கைப்பற்­று­கிறார் என்றுமுத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.

அஷ்­வி­னுக்கு தற்­போது 28 வய­தா­கி­றது.

அவரால் இன்னும் 10 ஆண்­டுகள் விளை­யாட முடி யும். 100 டெஸ்­டுகள் வரை விளை­யா­டினால் அஷ்வின் 600 முதல் 700 விக்­கெட்­டு­களை கைப்­பற்­றுவார். இவ்­வாறு முத்தையா முரளி­தரன் கூறி­யுள்ளார்.

கண்ணீரோடு விடைபெற்றார் சங்கா......!

இலங்கை மற்றும் இந்தி அணி­க­ளுக்­கி­டையில் இடம்­பெற்­று­வரும் இரண்­டா­வது டெஸ்ட் போட்­டி­யுடன் இலங்கை அணியின் நட்­சத்­திர வீரர் குமார் சங்­கக்­கார ஓய்வு பெறு­கின்றார். 

அணித்­த­லை­வ­ராக துடுப்­பாட்ட வீர­ராக விக்கெட் காப்­பா­ள­ராக சிரேஷ்ட வீர­ராக என சங்­காவின் பங்­க­ளிப்பு அவரின் 16 வருட கிரிக்கெட் வாழ்வில் அளப்­ப­ரி­யது. 

சர்­வ­தேச கிரிக்கெட் ரசி­கர்­களின் மனதை வென்ற வீரர்­களில் குமார் சங்­கக்­கா­ரவும் ஒருவர். எல்லா நாடு­க­ளிலும் இவருக்கு ரசிகர் பட்­டாளம் இருக்­கின்­றனர். 

187 ஓட்டங்கள் முன்னிலையில் இருக்கும் இந்தியா : களத்தில் நிற்கிறார் சங்கக்கார

காலி சர்­வ­தேச கிரிக்கெட் மைதா­னத்தில் நடந்து வரும் இலங்கை - இந்­திய அணி­க­ளுக்­கி­டை­யி­லான முதல் டெஸ்ட் போட்­டியில் இந்­திய அணி முதல் இன்­னிங்ஸில் 375 ஓட்­டங்­களைப் பெற்­றுக்­கொண்­டது.

இதில் தவான், கோஹ்­லியின் சதத்தால் இந்­திய அணி முதல் இன்னிங்ஸில் 192 ஓட்­டங்கள் முன்­னிலை பெற்­றுள்­ளது.

முதலில் விளை­யா­டிய இலங்கை அணி, அடுத்­த­டுத்து விக்­கெட்­டு­களை இழந்து 183 ஓட்­டங்­க­ளுக்கு ஆட்­ட­மி­ழந்­தது.

சுழல் பந்­து­வீச்­சாளர் அஸ்வின்,  6 விக்­கெட்­டு­களை வீழ்த்­தினார்.

உலகக் கிண்ண வலைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி : மீண்டும் தோல்வியைத் தழுவிய இலங்கை அணி

உலகக் கிண்ண வலைப்­பந்­தாட்டப் போட்­டி­களில் சிட்னி ஒலிம்பிக் பாரக் அல்ஃபோன்ஸ் எரினா அரங்கில் நேற்று நடை­பெற்ற  குழு எச் இற்­கான மற்­றொரு தகு­திகாண் போட்­டி­யிலும் இலங்கை தோல்வியடைந்­தது.

நேற்­றைய போட்­டியில் இலங்­கையை எதிர்த்­தா­டிய ஸ்கொட்­லாந்து 59 –  27 என்ற கோல்கள் அடிப் ­ப­டையில் வெற்­றி­யீட்­டி­யது.

உலகக் கிண்ண வலைப்­பந்­தாட்டப் போட்­டி­களில் நான்­கா­வது தட­வை­யாக ஒவ்­வொரு கால்­ப­கு­தி­யிலும் இரட்டை இலக்க எண்­ணிக்­கையைப் பெறத்­த­வ­றி­யது.

இலங்கை - பாகிஸ்தான் முதலாவது இருபதுக்கு 20 போட்டி இன்று...!

பாகிஸ்தான் வீரர்கள்

 • சஹிட் அப்ரிடி (தலைவர்)
 • அஹமட் செஷாட்
 • நௌமன் அன்வர்
 • மொஹமட் ஹபீஸ்
 • முக்தார் அஹமட்
 • உமர் அக்மல்
 • சுஹைப் மலிக்
 • மொஹமட் ரில்வான்
 • சப்ராஸ் அஹமட்
 • யாஷிர் ஷா
 • சுஹைல் தன்விர்
 • இமாட் வசீம்
 • அன்வர் அலி
 • மொஹமட் இர்பான்
 • ​ஷியா உல் ஹக்

இலங்கை வீரர்கள்

Pages

Subscribe to RSS - இலங்கை